தமிழ் சினிமா மட்டுமல்லாது,  அனைத்து மொழி சினிமா துறைகளிலும் ஒரு கதை உருவானதும் முதலில் தேர்வு செய்யப்படுபவர்கள் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாகத்தான் இருக்கும்.

ஆனால் இயக்குனர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் மில்கா செல்வகுமார் இயக்க உள்ள படத்திற்கு, கதாநாயகன்,  கதாநாயகி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில், காமெடி நடிகர் யோகி பாபுவை கமிட் செய்துள்ளார்.

இந்த படத்தில் யோகிபாபு காதலித்து இறந்து போன இரண்டு பேய்களை சேர்த்து வைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் பெயர் 'பியார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் காமெடி களத்தில் உருவாகும் இந்த படத்தில், யோகிபாபுவை தவிர, ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

 இந்த படத்தை இயக்க உள்ள மில்கா செல்வகுமார் தற்போது 'சண்டிமுனி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நீண்ட இடைவெளிக்குப்பின் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.