'சர்கார்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்க வில்லை என்றாலும் தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் தேர்வு மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'சர்கார்' படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளாராம் காமெடி நடிகர் யோகி பாபு.

இதற்காக இவருக்கு சம்பளமாக ரூ.80 லட்சம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

எனினும், சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்து இன்று தன்னை ஒரு காமெடியனாக நிலை நிறுத்தி கொண்டு, லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் ஒருவராக உயர்ந்துள்ளது அவருடைய திறமை என ரசிகர்கள் பலர் யோகி பாபுவை பாராட்டி வருகிறார்கள்.