Yogi Babu and Bhavana Balakrishnan Controversy : ரவி மோகன் ஸ்டூடியோ தொடக்க விழாவின் போது தன்னை சீண்டிப் பார்த்த பாவனாவிற்கு தரமான பதிலடி கொடுத்த யோகி பாபுவின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Yogi Babu and Bhavana Balakrishnan Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து இருப்பவர் நடிகர் யோகி பாபு. கவுண்டமனி, விவேக் ஆகியோரது வரிசையில் தன்னையும் ஒரு காமெடி ஜாம்பவானாக உயர்த்திக் கொண்டார். ரஜினிகாந்த், நயன்தாரா, அஜித், விஜய் என்று மாஸ் சினிமாவின் உச்சநட்சத்திர நடிகர், நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அடுத்து ரவி மோகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ரவி மோகன் ஸ்டூடியோ தொடக்க விழாவின் போது வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக காதலிக்க நேரமில்லை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் ரவி மோகன் சொல்லிவிட்டார். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ரவி மோகனின் ஆர் எம் ஸ்டூடியோ தொடக்க விழாவில் சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், கார்த்தி, யோகி பாபு, எஸ் ஜே சூர்யா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், சுதா கொங்கரா என்று ஏராளமான நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா தான் தொகுத்து வழங்கினார். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து Mind Voice Game விளையாடலாம் என்று சொல்லி முதலில் யோகி பாபுவிடம் சென்றார்.

அப்போது பேசிய அவர் முதலில் நான் உங்களை பார்க்கவில்லைவே இல்லை. எப்போது வந்தீர்கள். முதலில் எங்களுக்காக எழுந்து நில்லுங்கள் எங்களுக்காக என்றார் பாவனா. அதற்கு உன் பின்னாடி தான் நின்றிருந்தேன் என்றார் யோகி. இப்போது நீங்கள் முன்னாடி வந்துவிட்டீர்கள். அதான் பார்த்தேன். இப்போது ஒரு Mind Voice Game விளையாடலாமா என்றார். முதலில் உங்களது Mind Voiceல் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லுங்கள் அதன் பிறகு உங்களது பிரதருக்கு ஒரு வாழ்த்து சொல்லிருங்க என்றார். மேலும், இப்படி நல்லவரா நடிச்சா மட்டும் என்ன, உங்களது வாழ்த்தையும் தாண்டி என்ன யோசித்துக் கொண்டிருந்தீங்க என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த யோகி பாபு நான் நல்லது தான் நினைத்தேன். நீ யோசித்த மாதிரி நான் யோசிக்கவில்லை. நான் பின்னாடி நின்று கொண்டிருந்தேன். அவனை உள்ளே விடாதீர்கள். சேர் போடாதீங்க, இந்த மாதிரியா நான் யோசித்தேன் என்றார். அதற்கு விளக்கம் கொடுத்த பாவனா நீங்கள் ரொம்ப நல்லவருதான். நல்ல மனிதர் என்று கூற, அதனை சிரித்த மாதிரியே சொல் என்று சொல்ல, அதன் பிறகு யோகி பாபுவிற்கு நன்றி சொன்னார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யோகி பாபுவைத் தொடர்ந்து மாஸ் ஹீரோவான சிவகார்த்திகேயனிடம் ரொம்பவே அன்பாக பவ்வியமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.