தமிழ் சினிமாவில் பல்வேறு போராட்டங்களுக்கு பின் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து நிற்பவர் யோகிபாபு. கடந்த ஓரிரு வருடமாகவே, இவருக்கு திருமணத்திற்காக அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தீவிர பெண் வேட்டை நடத்தி வந்த நிலையில், தற்போது அவருக்கு ஏற்ற பெண் ஒருவரை பார்த்து விட்டதாகவும் அடுத்த மாதம் இவருக்கு திருமணம் நடைபெற உள்ள செய்திகள் வெளியாகியுள்ளது.

காமெடி நடிகர் யோகி பாபு, முன்னணி நடிகர்கள் படத்தில் தொடர்ந்து நகைச்சுவை வேடத்தில் நடித்து கலக்கி வருகிறார். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான 'தர்பார்' படத்தில் தலைவருடன் நடித்து கெத்து காட்டி இருந்தார்.

மேலும், 'தர்பார்' படத்தின் ஆடியோ லாஞ்சு விழாவில் கூட, தலைவரே இந்த வருடம் எனக்கு திருமணம் ஆகிவிடும் என சொல்லிவிட்டார் எனவே கண்டிப்பாக நடந்து விடும் என கூறினார்.

சூப்பர்ஸ்டாரின் வாய் முகூர்த்தம் தற்போது பலித்துவிட்டது. ஆம்... யோகிபாபுக்கு பல இடங்களில் பெண் பார்த்து வந்த பெற்றோர் தற்போது பார்கவி என்கிற பெண்ணை, திருமணம் முடித்து வைக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்த பெண் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. மேலும் யோகிபாபு - பார்கவி திருமணம், பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

யோகிபாபு திருமணத்திற்காக, தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியை கடந்த சில மாதங்களாகவே செய்து வரும் நிலையில், கதையின் நாயகனாக நடிக்கும் படங்கள் வரிசை கட்டி வந்தாலும், ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே அப்படி நடிப்பேன், மற்றபடி காமெடி படங்களில் மட்டுமே அதிகம் நடிப்பேன் என கூறியுள்ளார்.

என்னதான்... கோடி கோடியாய் சம்பாதித்தாலும்... குடும்பத்தையும் பார்க்க வேண்டும் அல்லவா... அதான் இந்த பிளான்... சபாஷ் யோகி