காமெடி ஹீரோவில் இருந்து ஹீரோவாக புரோமோஷன் வாங்கிய யோகிபாபு இப்பது கதை, திரைக்கதை, வசனம் என புதுப்புது அவதாரங்களை எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது, யோகிபாபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம்  “கோலமாவு கோகிலா”. நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயனை விரட்டி, விரட்டி காதலிக்கும் சூப்பர் பாயாக அந்தர் செய்திருந்தார் யோகிபாபு. 

யோகிபாபுவிற்கு என்று தனியாக பாட்டு, அதில் அவரு ஆடுன வேற லெவல் ஸ்டெப்ஸ் எல்லாம் தாறுமாறு வைரலானது. இந்த படத்திற்கு பிறகு தான் தனது சொந்த வீட்டு கிரகபிரவேசத்தில் கூட  பங்கேற்க முடியாத அளவிற்கு பிசியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் யோகிபாபு. 

இந்த படத்திற்கு பின், பலர் இவரை காமெடி ஹீரோவாக இல்லை, ஹீரோவாகவே நடிக்க வைக்க போட்டி போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில், தற்போது திருமண பந்தத்திலும் இணைந்து விட்டதால், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிந்த வரை ஹீரோவாக நடிக்கும் படங்களின் வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம். அதே நேரத்தில் தன்னை வாழ வைத்தது, காமெடி கதாப்பாத்திரங்கள் ஏற்பதால் அதனை மட்டும் விட்டு கொடுக்காமல் நடித்து கெத்து காட்டி வருகிறார்.

கடந்த இரண்டு மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக பட பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை, நலிந்த கலைஞர்கள், மற்றும் காவலரகள் அனைவருக்கு உதவிகளை செய்தார்.

இந்நிலையில் இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, காலா, கபாலி என இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூரப்பப்டுகிறது. இதுவரை இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்‌ஷன்ஸ் சார்பில், தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ , ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.