"மரியாதையில்லாத சின்ன பசங்க" ஹீரோக்களை திட்டும் மதுவந்தியின் தந்தை! ஒய்.ஜியால் பதறும் கோடம்பாக்கம்!!
YG Mahendran| தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டும் என்னும் மரியாதை கூட இன்றைய நடிகர்களுக்கு கிடையாது என ஒய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வெளியாகி பெருதும் பேசப்பட்டு வரும் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இந்த படம் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு திரை கண்டுள்ளது. படப்பிடிப்பு முதல் ரிலீஸ் ஆவது வரை பல முறை போராடி வென்றுள்ளது இந்த படம். இதில் விஜயின் தந்தையம் பிரபல இயக்குனருமான சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், வைகை சந்திரசேகர் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்கள் இந்த படத்தில் அதிரடி நடிப்பை காட்டியுள்ளனர். சிம்பு நாயகனான இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா போலீஸாக வந்து அதிரடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் கதையின் முக்கிய வில்லனாக தனது நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகர் ஒய் ஜி மகேந்திரன். பழுத்த அரசியல் வாதியின் ராஜா தந்திரம் அருமையாக இவரது நடிப்பில் பிரதி பலித்திருந்தது. இவரின் நடிப்பு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வரும் மதுவந்தியின் தந்தையான ஒய் ஜி "மாநாடு" படம் குறித்து தற்போது அளித்துள்ள பேட்டி செம வைரலாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் சிம்பு பற்றி பேசியுள்ள ஒய்.கி.மகேந்திரன்: சிம்பு மற்றவர்கள் சொல்வது போல மரியாதையை தெரியாதவர் இல்லை. பெரியவர்களிடம் மிக்க மரியாதையுடனும் அன்பாகவும் நடந்து கொள்வார். அவர் குறித்து ஏன் இவ்வாறு தவறான கருத்து பரவுகிறது என தெரியவில்லை என கூறியுள்ளார்.
மேலும் பேசியுள்ள இவர், அந்த காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் வீட்டு போனிற்கு யார் அழைத்தாலும் உடனடியாக எடுத்து பதிலளிப்பார்கள். ஆனால் இன்றைய நடிகர்களுக்கு பூண் செய்தால் மூன்றாவது நிலை உதவியாளர் தான் அழைப்பை எடுக்கிறார். என தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து எந்த நடிகரை குறிப்பிடுகிறது என்னும் கேள்வி கோடம்பாக்கம் முழுவதும் பற்றிக்கொண்டுள்ளது.