yesudoss open talk about ilayaraja issue

பல இசை கலைஞர்களுக்கு குருவாக விளங்குபவர் பாடகர் ஏசுதாஸ், பல விருதுகளை வாங்கி குவித்துள்ள இவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பேசுவதற்கு திருச்சியில் தனியார் தொலைக்காட்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் கடவுள் அனுக்கிரகத்தால் தான் தனக்கு இந்த விருது கிடைத்தது என்கிறார். மேலும் தான் எப்போதும் விருதுகளுக்காக அதிக சந்தோஷம் அடைவதில்லை என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், சிலர் இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர் எஸ்.பி.பி க்கு தன்னுடைய பாடல்களை பாட கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளாரே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு.

நான் யாருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை, என்னை ஏன் கேட்கிறீர்கள் யார் அனுப்பினாரோ அவரை போய் கேளுங்கள் என எரிந்து விழுந்தார்.

இதை தொடர்ந்து தேசிய விருது வழங்குவதில் குளறுபடிகள் நடந்து விட்டதாக கூறப்படுகிறது அதை பற்றியாவது கூறமுடியுமா என கேட்டபோது யார் அப்படி கூறினார்களோ அவர்களை போய் கேளுங்கள் என கூறி மிகவும் கோபமாக அந்த இடத்தை விட்டு விலகி சென்றார்.

இது வரைக்கும் எந்த ஒரு கேள்வி எழுப்பினாலும் மிகவும் தன்மையாக பதில் கூறும், யேசுதாஸ் முதல் முறையாக இப்படி நடந்து கொண்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.