- Home
- Politics
- நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
நான் அவமானப்பட்டு ஒதுங்கி சந்திரமுகி படத்தில் வரும் நீலாம்பரி போல என்னால் ஒதுங்கி இருக்க முடியாது. நான் வேலை பார்க்கக் கூடியவன். எனக்கு யார் ஒத்துழைப்பு தருகிறார்களோ, யார் என்னை ஊக்கப்படுத்துகிறார்களோ அங்கே வந்திருக்கிறேன்.

நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார். விஜய் நடித்த புலி படத்தை தயாரித்தவர். பின்னர் கலப்பை என்கிற இயக்கத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், திமுகவில் இன்று இணைந்த அவர் விஜய் குறித்தும், அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ விஜய் நடிகராக பணியாற்றும்போது அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற எண்ணத்தில் விஜய் மக்கள் இயக்கதை நானும் அவர் கூட இருந்து கட்டமைத்தவன் தான். இந்த கலப்பை மக்கள் இயக்கத்தை எப்படி கட்டமைத்து, அதை ஒழுங்காக நடத்துகிறானோ, விஜய் மக்கள் இயக்கத்திற்கும் நான் ஒரு மிகப்பெரிய ஒரு பில்லராக இருந்து பணியாற்றியவன். ஆனால், காலப்போக்கில் உங்களுக்கு தெரியும், நிறைய ஒரு புதிது புதிதாக உள்ளே வருகிறார்கள். அந்த புதிது புதிதாக வருபவர்கள் முன்னிலையில் எங்களை மாதிரி ஆட்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஜயின் அப்பாவாலேயே அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கு பயணம் பண்ண முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது.
என்னைக்குமே நிலவு நிலவுதான். நிலவு ஒரு குறிப்பிட்ட காலம் தான் இருக்கும். விஜய் ஒரு நட்சத்திரம் மாதிரி தான். விஜய் அவர்கள் நிலவு போல. குறைந்தது ஒரு 15 நாள் இருப்பார். 15 நாட்களில் நிலவு எப்படி மறைந்து போகுமோ அதே மாதிரி. நடிகர்களுடைய சேவை அப்படித்தான் இருக்கும். மக்களை, ரசிகர்களை சரியானபடி வழிநடத்தி, அவர்களுடைய தேவைகளை பூர்த்தி பண்ணுவாரா? என்பது எனக்கு தெரியவில்ல. எனக்கு மக்களுக்கு சர்வீஸ் பண்ணனும். என் உயிர், பொருள், ஆவி எல்லாத்தையும் இந்த மக்களுக்காக சேவை செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்கு ஒரு நல்ல கட்டமைப்பு தேவைப்பட்டது. அந்த கட்டமைப்பு இன்றைக்கு உள்ள சூழலில் திமுக மிக சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அங்கே இணைந்து கொண்டேன். என்னை வரவேற்கிறது.
நல்ல கூட்டம் ஒன்னு இருக்கிறது. இந்தக் கூட்டத்தை என்ன செய்யும் என்றால் நல்லவர்களை எல்லாம் வெளியேற்றி விடுவார்கள். குப்பைத்தொட்டிகளை மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். நல்லவர்களை வெளியேற்றி விடுவார்கள். அவர்களிடம் நிர்வாகத்தை கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருக்கும். நிறைய புகழ் இருக்கும். புகழ் வெளிச்சம் இருக்கும். உச்சத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களை சுற்றி இருக்கிறவர்கள் சரியாக அமையாவிட்டால் அவர்கள் வேறொரு திசைக்கு கொண்டு சென்று விடுவார்கள் என்பதை என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்திருக்கிறேன். ஜெயலலிதாவின் வாழ்க்கையை பார்த்தீர்கள் என்றால் அப்படித்தான். சுற்றி இருப்பவர்கள் ரொம்ப நல்லவர்களாக இருக்க வேண்டும்.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் என எல்லோரையும் எடுத்துக் கொள்ளுங்கள். இதை சொல்வதில் எனக்கு என்ன பயம் இருக்கிறது? உண்மைதானே. கடைசியில் சேர்ந்த நான்சில் சம்பத் முதல் எல்லோரும் தியாகிகள் கிடையாது. ஆரம்பத்டில் விஜய் மாற்றமான அரசியல் கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். முதலில் நான் ரசிகர் மன்றத்திற்காக உழைத்தவர்களுக்கு, போஸ்டர் ஒட்டியவர்களுக்கு, பால் ஊற்றியவர்களுக்கு மட்டும்தான் நான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு அங்கே இருக்கிற 7 பேர்களை சொல்கிறேன். அந்த ஏழு பேரும் ஏதாவது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களா? அது புஸ்ஸி ஆனந்தாக இருக்கட்டும், வெங்கட்ராமனாக இருக்கட்டும், சி.டி. நிர்மல் குமாராக இருக்கட்டும், நாஞ்சில் சம்பத்தாக இருக்கட்டும், செங்கோட்டையாக இருக்கட்டும். யாருமே ரசிகர்களாக இருந்து அவருக்கு ஆரம்ப காலத்தில் உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் யாரும் அதில் இல்லை. அதனால் தான் அந்த வேதனை பகிர்ந்து கொள்கிறேன்.
நான் கஷ்டப்பட்டு உழைத்தது பத்திரிக்கையாளர்களான உங்களுக்கு தெரியும். நான் அவமானப்பட்டு ஒதுங்கி சந்திரமுகி படத்தில் வரும் நீலாம்பரி போல என்னால் ஒதுங்கி இருக்க முடியாது. நான் வேலை பார்க்கக் கூடியவன். எனக்கு யார் ஒத்துழைப்பு தருகிறார்களோ, யார் என்னை ஊக்கப்படுத்துகிறார்களோ அங்கே வந்திருக்கிறேன். மகேஷ் பலமுறை என்னை கூப்பிட்டார். எங்களுடன் வந்து வேலை செய்யுங்கள் உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று சொல்கிறார்கள். அப்போது அவர்களுடன்தான் நான் பயப்பட முடியும்’’ எனத் தெரிவித்தார்.
