தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் அனைத்து நடிகைகளுக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால், நோ சொல்லாமல் உடனே ஓகே சொல்லி விடுவார்கள்.

ஆனால் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான யாஷிகா, அஜித்துடன் நடிக்க ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

நடிகை யாஷிகாவிற்கு, அடல்ட் காமெடியாக எடுக்கப்பட்ட 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் கிடைத்த ரசிகர்களை விட, பிக் பாஸ் சீசன் 2 , நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற தகுதியும், திறமையும் இருந்தும், ஒரு சில காரணங்களால் மக்களிடம் அதிருப்தியை பெற்று, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ட்விட்டர் பகுதியில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுத்தார்.

ரசிகர்கள் ஒருவர் எந்த நடிகருடன் நடிக்க விருப்பம் என எழுப்பிய கேள்விக்கு, அஜித்துடன் நடிக்க விருப்பம் என்றும், அவர் நடிக்கும் படத்தில் சிறிய கதாப்பாத்திரம் கொடுத்தால் கூட நடிப்பேன், ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் நடிக்க மாட்டேன் என பளீச் என பதில் கொடுத்துள்ளார்.