பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இந்த வாரத்தின் இறுதியில் 100 நாட்களை எட்ட உள்ளதால், பலரும் இந்த சீசன் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது மீண்டும் இவர்கள் கெஸ்ட்டாக நிகழ்சிக்குள் வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

தற்போது யாஷிகா விஜய் தொலைக்காட்சிக்கு, அளித்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, அவரையும் மீறி காதலித்த மஹத் பற்றி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். 

இதில் மஹத்துடன், தொடர்ந்து பேசுவீர்களா பேசுவார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, நானாக சென்று அவரிடம் பேச மாட்டேன். அவர் என்னிடம் வந்து பேச வேண்டும் என நினைத்தால், அவர் என்னிடம் வந்து பேசினால் கண்டிப்பாக பேசுவேன் என கூறியுள்ளார்.

மஹத் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது, அவரை உருகி உருகி காதலித்த யாஷிகா, இப்படி கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இருக்கிறது. மஹத் யாஷிகாவிடம் வந்து பேசுவாரா? இவர்கள் காதலர்களாக பழகாவிட்டாலும், நண்பர்களாக பழகுவார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.