பிக்பாஸ் 2 போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய போட்டியாளர்களின் ஒருவர் நடிகை யாஷிகா. டைட்டில் வெல்லும்   தகுதி இருந்தும் இவர் நடிகை ஐஸ்வர்யாவுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்ததால் கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக இவரே வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவ்வப்போது கேமிரா முன் நின்று மொக்க ஜோக் சொல்வதை போல் தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொக்க ஜோக் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் 'என் செல்போன் கீழே போட்டும் உடையல ஏன் தெரியுமா? ஏன்னா அது பிளைட் மோட்ல இருந்தது. அதனால கீழ விழாம பறந்துடுச்சு' என்று ஒரு மொக்கை ஜோக்கை பதிவு செய்துள்ளார். 

இந்த வீடியோவை இதுவரை சுமார் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவுக்கு பெரும்பாலும் நெகட்டிவ் கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக 'இந்த மாதிரி மொக்க ஜோக் சொல்லி எங்களை சாவடிக்காதே' என நெட்டிசன்கள் பலர் இவரை கண்கொண்டு தெறித்து ஓடுகிறார்கள் என்றால் பாருங்களேன்.

அந்த வீடியோ இதோ..