பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் ஃபைனல்ஸ் இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இருதிகட்டத்திற்குள் நுழைவதற்கான தகுதி போட்டியை நேற்று நடத்த துவங்கினார் பிக் பாஸ். 

ஒரு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு அங்கு வரையப்பட்டிருக்கும் வட்டத்தினை சுற்றி வர வேண்டும். தொடந்து வட்டத்தை சுற்றும் போது கையில் உள்ள கிண்ணத்தில் இருக்கும் நீரை சிந்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். போட்டியின் முடிவில் யாருடைய கிண்ணத்தில் அதிகம் நீர் இருக்கின்றதோ அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்ட போட்டிக்கு நேரடியாக நுழையும் வாய்ப்பினை பெறுவார். 

இதற்காக நடைபெற்ற போட்டியி விஜயலஷ்மி, யாஷிகா மற்றும் ஜனனி ஆகிய மூவரும் தான் கடைசி கட்டத்தில் போராடி இருக்கின்றனர். அதில் விஜயலஷ்மி தோற்றுவிடவே, ஜனனி மற்றும் யாஷிகாவிற்கு இடையே இந்த போட்டி தொடர்கிறது. இன்று வெளியாகி இருக்கும் முதல் பிரமோவின் போது இந்த இருவருக்கும் இடையே நடந்த இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றிருக்கிறார் என அறிவித்திருக்கிறார் பிக் பாஸ். 

நேற்று இரவு முதல் இன்று காலை வரை போராடிய இந்த இருவரில் இடையில் ஏற்பட்ட சிறு தடுமாற்றம் காரணமாக, ஜனனி மற்றும் யாஷிகாவின் கையில் இருக்கும் கிண்ணத்தில் இருந்த அந்த நீர் கொஞ்சம் கொட்டி விடுகிறது. இறுதியில் யாஷிகா கையில் தான் அதிகம் நீர் இருப்பது போல இந்த பிரமோ காட்டுகிறது. மொத்தத்தில் யாஷிகா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்துக்குள் நேரடியாக நுழைந்திருக்கும் அந்த போட்டியாளர் என இந்த பிரமோ காட்டி இருக்கிறது. 

இதனால் இனி வரும் வாரங்களுக்கு அவரை யாராலும் எலிமினேட் செய்ய முடியாது. மொத்தத்தில் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் ஆரம்பத்திலேயே சொன்னது போல, தாங்கள் யார் என , பிற போட்டியாளர்களுக்கு இப்போது புரியவைத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.