பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக, சண்டை சச்சரவு என கலகலப்பாக போகிறது. எனினும் பிக்பாஸ் முதல் சீசனுக்கு இருந்த வரவேற்ப்பு தற்போது இல்லை என்பது தான் உண்மை.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி கமல் வரும் இரண்டு நாட்களும் நல்ல டிஆர்பி-யை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சிக்கொண்டே காதலர்கள்  போல சுற்று வந்த மஹத் மற்றும் யாஷிகா இருவரையும், மோத வைத்துள்ளது பிக்பாஸ்.

தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், பிக்பாஸ்ஸிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறது. அதனை ஜனனி படிக்கிறார். அதில் அடுத்த வார தலைவருக்காக யாஷிகா, மற்றும் மஹத் இருவரும், மற்ற போட்டியாளர்களிடம் கேன்வாஸ் செய்யவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.

இதனால் இவர்கள் இருவரும், அனைத்து போட்டியாளர்களிடமும் சென்று பேசுகிறார்கள். தன்னை பற்றி பெருமையாக பேசி... போட்டியாளர்களை கவர முயற்சி செய்கின்றனர். 

இதற்காக மஹத் பேசும் போது, வேண்டும் என்றே வெறுப்பேற்றுவது போல் பேசுகிறார் பாலாஜி. மேலும் மும்தாஜ் இனி விளையாட மாட்டார் என்றும் பேச்சு அடிப்படுகிறது. என்ன நடிக்கபோகிறது தலைவர் பதவியை கைப்பற்ற இருவரும் என்ன என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.