KGF 2 Trailer : ஆர்.ஆர்.ஆர் படத்தையே மிஞ்சும் பிரம்மாண்டம்... வைரலாகும் KGF 2 படத்தின் மாஸ் டிரைலர்
KGF 2 Trailer : கே.ஜி.எஃப் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக பெங்களூருவில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கே.ஜி.எஃப் 2
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப். யாஷ் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டாண்டன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சஞ்சய் தத் வில்லன்
இப்படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கடந்தாண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது. இந்நிலையில், இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.
டிரைலர் ரிலீஸ்
இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அதன்படி கே.ஜி.எஃப் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக பெங்களூருவில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். பிரம்மாண்ட பொருட்செலவில் செம்ம மாஸாக ஒவ்வொரு காட்சியும் எடுக்கப்பட்டுள்ளது டிரைலரில் பிரதிபலிக்கிறது.
மாஸ் வசனங்கள்
மேலும் இதில் இடம்பெறும் ‘இரத்தத்தில் எழுதுன கதை இது... மையால தொடர முடியாது’, ‘கத்தி வீசி இரத்தம் வழிய யுத்தம் செய்வது நாசம் ஆக்குறதுக்கு இல்ல உருவாக்குறதுக்கு’ போன்ற வசனங்கள் ரசிகர்களை கவரும் விதமாக உள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... குட் நியூஸ் சொன்ன வெங்கட் பிரபு... மீண்டும் இணைந்து இசையமைக்கும் இளையராஜா - கங்கை அமரன்! அட இவர் படத்துலயா?