நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள ராமாயணம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் புரோமோ வெளியாகி உள்ளது.

Ramayana First Look : ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புராண கதையம்சம் கொண்ட படமான ராமாயணத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ பிரமிக்க வைக்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரன்பீர் ராமர் அவதாரத்தில் காட்சியளிக்கிறார். அவரது தோற்றம் அற்புதமாக உள்ளது. அவர் வில்லுடன் ஒரு போர்வீரராகத் தெரிகிறார். பின்னணியில் காடு, சூரியன் மற்றும் மேகங்களும் காணப்படுகின்றன.

பிரம்மிக்க வைக்கும் ராமாயணம் பர்ஸ்ட் லுக்

அதே நேரத்தில், ரன்பீருடன் யாஷ்ஷின் தோற்றமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது, அவர் படத்தில் ராவணனாக நடிக்கிறார். வீடியோவில் ராமருக்கும்-ராவணனுக்கும் இடையேயான போர் காட்டப்பட்டுள்ளது. ரன்பீர் மற்றும் யாஷ்ஷின் தோற்றத்தை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். ராமாயணம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இதன் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளியிலும் வெளியிடப்படும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிட்டுள்ளனர்.

ராமாயணம் பட பட்ஜெட்

இரண்டு படங்களின் மொத்த பட்ஜெட் 835 கோடியாகும். ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் ஹனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார். மண்டோதரியாக காஜல் அகர்வாலும், சூர்ப்பனகையாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கும் இப்படத்திற்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்து இசையமைத்து உள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

ராமாயணம் படத்தில் நடிக்க பிரபலங்களுக்கு சம்பளமும் வாரி வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இதில் ராவணனாக நடிக்க நடிகர் யாஷ்ஷுக்கு மட்டும் ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். இந்திய சினிமா வரலாற்றிலேயே வில்லனாக நடிக்க இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது இதுவே முதன்முறையாகும். அதேபோல் இப்படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவிக்கு ஒரு பாகத்துக்கு ரூ.15 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். அவருடைய கெரியரில் அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் இதுவாகும்.

View post on Instagram