ஒவ்வொரு வருடமும், எந்த ஸ்டார் நடித்த திரைப்படம் அதிக வசூல் சாதனை செய்தது என்பதை தெரிந்து கொள்ள, பல ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

அந்த வகையில் இந்திய சினிமாவில், கடந்த 10 வருடத்தில் அதிக வசூல் செய்து, சாதனை செய்த படங்களின் விவரத்தை தற்போது 'Yahoo ' இந்தியா நிறுவனம் Decade in Review என்கிற பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், 10 வருடத்தில் இந்தியா மட்டும் இன்றி பிற நாடுகளிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, 2000 கோடி வசூல் சாதனை படைத்தது, முதல் இடத்தை பிடித்துள்ளது நடிகர் அமீர் கான் நடித்த 'தங்கள்' திரைப்படம்.

இரண்டாவது இடத்தை, நடிகர் சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படமும், மூன்றாவது இடத்தை அமீர் கான் வேற்றுகிரக வாசியாக நடித்த, பிகே திரைப்படமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.