உலகத் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் ‘கூட்டாளி’ திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று இயக்குநர் சீனுராமசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை அன்று ‘கூட்டாளி’ திரைப்படம் திரையிடப்பட்டது. அதனைக் காண மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர்கள் சீனு ராமசாமி, சமுத்திரக்கனி, ராஜூ முருகன், நடிகர்கள் இளவரசு, அருள்தாஸ், ராமதாஸ் ஆகியோர் வந்திருந்தனர்.

காட்சி நிறைவடைந்தவுடன் சீனு ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், “இலங்கை தமிழர்களின் வாழ்வை நேர்மையாக, நுட்பமாக கூட்டாளி படத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஒருவேளை இலங்கை தமிழர்களின் கனவு நிறைவேறி இருந்தால், எப்படி இருக்கும் என்பதை இப்படம் காட்டுகிறது. இதனை இயக்கிய நிரோஜனுக்கு வாழ்த்துக்கள்.

உலகத் தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். நிரோஜன் தன்னுடைய மாணவன், அவரே இயக்குநராகவும், நாயகனாகவும் இடம்பெற்றிருப்பது சிறப்பு” என்று அவர் நெகிழ்ந்தார்.