- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கலெக்டரோடு கூட்டணி சேர்ந்த ஜனனி... பதறிப்போய் குணசேகரன் எடுத்த அதிரடி முடிவு - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
கலெக்டரோடு கூட்டணி சேர்ந்த ஜனனி... பதறிப்போய் குணசேகரன் எடுத்த அதிரடி முடிவு - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கடைத் திறப்பு விழாவுக்கு சப்போர்டாக இருந்த கலெக்டர் மதிவதினியை மீண்டும் சந்தித்து பேசி உள்ளார் ஜனனி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஃபுட் டிரக் பிசினஸ் வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தன் தம்பிகளை நம்பியதால் அடிமேல் அடிவாங்கி வரும் ஆதி குணசேகரன், தற்போது தானே களத்தில் குதித்துள்ளார். தன் தம்பிகளுடன் சிறுமலையில் தலைமறைவாக இருந்த அவர், மீண்டும் மதுரைக்கே ஜூட் விட்டுள்ளார். அவர் மதுரையில் தனக்கு தெரிந்த ரெளடி ஒருவரிடம் போனில் பேசி, உன்னை நம்பி தான் வருகிறேன் என்று சொல்கிறார். ஆதி குணசேகரன் சந்திக்க போகும் அந்த ரெளடி யார்? என்பது சஸ்பென்ஸாகவே இருந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஆதி குணசேகரனின் அடுத்த மூவ்
ஆதி குணசேகரன் மதுரையில் குமார் என்கிற ரெளடியை சந்தித்து, அவரிடம் தான் தற்போது உதவி கேட்டிருக்கிறார். அந்த குமார், ஆதி குணசேகரனின் விசுவாசியாம். சிறு வயதில் இருந்தே அவரைப் பார்த்து வளர்ந்தவன் என்றும், ஒருமுறை கிணற்றில் குளிக்கும்போது தலையில் அடிபட்டு மூழ்கிய என்னை அண்ணன் தான் காப்பாற்றினார். அவர் மட்டும் அன்றைக்கு என்னை காப்பாற்றவில்லை என்றால், நான் இன்று உயிருடனே இருந்திருக்க மாட்டேன். அவரால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்று ஓவர் பில்டப்போடு பேசுகிறார்.
கலெக்டரை சந்தித்த ஜனனி
மறுபுறம் கடை திறப்பு விழாவில் இருந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்த கலெக்டர் மதிவதினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார் ஜனனி. அங்கு அவரிடம் ஒரு பரிசையும் கொடுக்கிறார். அதை மதிவதினி வாங்க மறுக்க, ஒரு தங்கையாக என்னை நினைத்து இதை வாங்கிக்கோங்க என சொன்ன பின்னரே அதை பெற்றுக்கொண்டார் கலெக்டர். பின்னர் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, இன்னைக்கு உங்க முன்னாடி இவ்ளோ தைரியமா பேசிக்கிட்டு இருக்கும் நான், ஒருகாலத்துல பேசுவதற்கே பயந்தேன் என தன்னுடைய பிளாஷ்பேக் கதையை சொல்கிறார்.
அடுத்து என்ன?
ஆதி குணசேகரன் அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியாக மதுரையிலேயே தஞ்சம் அடைந்திருக்கிறார். இதனால் அவர் ஜனனிக்கு மேலும் குடைச்சல் கொடுக்க அதிக வாய்ப்பு உண்டு. அதேபோல் மதுரையில் அவரை வலைவீசி தேடி வரும் கொற்றவை தலைமையிலான குழு, அரெஸ்ட் பண்ணவும் வாய்ப்பு இருக்கு. போலீசுக்கு பயந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மெதுவாக எடுப்பாரா? அல்லது கைதானாலும் பரவாயில்லை என ஜனனியை தீர்த்துக்கட்ட களத்தில் குதிக்கப்போகிறாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

