Wise image was sold for Rs 9 crore This is only in Coimbatore ...
அஜீத் நடித்து வரும் ‘விவேகம்’ படம் கோவை ஏரியாவில் ரூ.9 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது நடித்து வரும் படம் ‘விவேகம்’.
இந்தப் படத்தில் அஜீத்துக்கு இணையாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
அஜீத்துக்கு வில்லனாக விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.
படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.
சிவா & அஜீத் கூட்டணியில் இதற்கு முன் வெளியான இரண்டு படங்களும் வசூல் வேட்டை நடத்தி சாதனைப் படைத்ததால் இந்தப் படத்தையும் விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்ட நிலையில், கோவை ஏரியா ரூ.9 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.
இதுவரை எந்தவொரு அஜீத் படமும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
