Wisdom teaser affects in the United States
அஜீத்தின் விவேகம் டீஸர் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று யூ-டியூப்பை அலறவைத்த இந்த நேரத்தில் அமெரிக்காவின் “போர்ப்ஸ்” பத்திரிகையும் அஜித்டை வெகுவாக பாராட்டியுள்ளது.
வீரம், வேதாளம் படங்களுக்கு பின் சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித் நடிக்கும் படம் விவேகம். இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களையும் விட விவேகம் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரமாண்ட படமாக உருவாகி இருக்கிறது என்பதற்கு அதன் டீஸரே ஒரு உதாரணம்.
அப்படி ஒரு டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு வெளியாகி சாதனை படைத்த பல முன்னணி ஹீரோக்களின் பட டீசர்களை அதாவது கபாலி போன்றவற்றின் டீஸரை விட அதிகமான பார்வையாளர்கள், லைக்குகளை பெற்று முன்னிலையில் முந்திக் கொண்டு நிற்பது அஜித்தின் விவேகம் டீஸர்.
இந்த டீஸர் இந்திய அளவில் மட்டுமில்லாமல் அமெரிக்காவிலும் மிகப்பெரிய ரீச் கிடைத்துள்ளது. இதை அங்குள்ள ‘போர்ப்ஸ்’ பத்திரிகை பாராட்டுகள் மூலம் தெரிவித்துள்ளது.
அந்தப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி:
“தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அஜீத் பட டீசரை அவரது ரசிகர்கள் இடைவிடாமல் பார்த்து சாதனை செய்திருக்கிறார்கள். விவேகம் பட டீசர், ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக உள்ளது. தவிர, இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் சாதனை சர்வசாதாரணமாக முறியடிக்கப்பட்டு உள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
