தமிழ் சினிமாவின் காஸ்ட்லி ஜெராக்ஸ் மெஷின்கள்! என்று முன்வரிசை இயக்குநர்கள் அட்லீ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரையும்  தர லோக்கலாக கலாய்க்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். காரணம்? ஒன்று அடுத்தவர்களின் கதையை திருடி படம் எடுப்பது, அல்லது ஏற்கனவே ஹிட்டான பழைய படத்தின் கதையை பட்டி, டிங்கரிங் பார்த்து படமெடுப்பது! இதுதான் இவர்களின் வேலை! என்கிறார்கள். 
அட்லீயின்  முதல் படமான ‘ராஜ ராணி’ அப்படியே ‘மெளன ராகம்’ படத்தின் ஜெராக்ஸ் காப்பி. அடுத்த படமான ‘தெறி’யோ விஜயகாந்தின் ‘ஆனஸ்ட் ராஜ்’ படத்தின் பக்கா தழுவல். மூன்றாவது படமான ‘மெர்சல்’ படமோ ‘மூன்று முகம்’ படத்தினை பட்டி, டிங்கரிங் பார்த்து எடுக்கப்பட்டது. 

அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸின் படங்களும் அடிக்கடி ‘திருட்டுக் கதை’ விவகாரத்தில் சிக்குவது வாடிக்கை. அதிலும் சர்க்கார் படக்கதை மிக மோசமான ‘திருட்டு’ விவகாரத்தில் சிக்கி, கடைசியில் டைட்டிலில் பெயரும், நஷ்ட ஈடும் கொடுக்குமளவுக்கு அசிங்கப்பட்டார் ஏ.ஆர் முருகதாஸ். மேற்படி படங்களை எடுத்துக் கொண்டால்  இப்படி திருட்டு மற்றும் காப்பி பஞ்சாயத்தில் சிக்கிய தெறி, மெர்சல், சர்கார் என மூன்றும் விஜய் ஹீரோவாக நடித்த படங்கள். திருட்டு கதை! எனும் விவகாரத்தில் ‘சர்கார்’ சந்தி சிரித்த பிறகும் கூட விஜய் மாறவில்லை என்பதுதான் கொடுமை. 

தனது அடுத்த படமான ‘பிகில்’ படத்தில், அட்லீயோடு இணைந்தார். அட்லீயின் பழைய கூத்துகள் எல்லாம் தெரிந்தும் இதை செய்தார் விஜய். பிகிலில், பழைய ஹிட் படங்களை அட்லீ காப்பியடித்துள்ளாரா என்பது இனிதான் தெரியும். ஆனால், இந்தப் படத்தின் கதை ‘திருடப்பட்ட ஒன்று’ எனும் விவகாரத்தில் சிக்கி, கோர்ட் வரை போயிருக்கிறது. கே.பி. செல்வா எனும் உதவி இயக்குநர் ‘பிகில் பட கதை என்னுடையது’ என்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

அங்கு தள்ளுபடியானது இந்த வழக்கு. இந்நிலையில் காப்புரிமை வழக்கு தொடர, செல்வாவுக்கு அனுமதி வழங்கியுள்ளது ஐகோர்ட். இதனால் உற்சாகமாகி இருக்கும் செல்வா ‘ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு, எங்க்ளுக்கு கிடைத்த முதல் சிறிய வெற்றி. விரைவில் எனது உரிமைக்காக வழக்கு தொடர்வேன்.’ என்று கூறியுள்ளார். ஆக பிகில் படமும் ‘திருட்டுக் கதை’ பஞ்சாயத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் விஜய்யை கன்னாபின்னாவென விமர்சிக்க துவங்கியுள்ளனர் விம்ர்சகர்கள். உச்சமாக....“கதை மற்றும் காட்சி திருடர்கள் என தெரிந்திருந்தும் கூட அட்லீ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவருடனும் வெறும் ‘கமர்ஷியல் வெற்றி’ என்ற ஒன்றுக்காக தொடர்ந்து பயணிக்கிறீர்களே! உங்களுக்கு இது அசிங்கமாக இல்லையா விஜய்? கதையும், காட்சிகளும் திருடப்பட்டுதான் உங்கள் படங்கள் இவர்கள் இயக்கத்தில் உருவாகின்றன என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 

மீண்டும் மீண்டும் இப்படி இளம் மற்றும் புது இயக்குநர்களின் வாழ்க்கையில் அடிக்கும் நபர்களோடு கைகோர்க்கலாமா நீங்கள்? பல லட்சம் இளைஞர்களின் ஸ்டாராக இருக்கும் நீங்கள், உங்களுக்கு சோறு போடும் சினிமா துறையை நம்பி வாழும் இளைஞர்களின் வயிற்றிலும், வாழ்விலும் அடிக்கும் நபர்களை என்கரேஜ் செய்வது ஏன்? நீங்கள் வாங்கும் பல கோடி பணமானது திருட்டுப் பணமாகவோ, கள்ள நோட்டாகவோ இருந்தால் அதை ஒப்புக் கொள்வீர்களா?” என்று கேட்டுள்ளனர். என்ன சொல்லப்போகிறார் விஜய்?