விஜயின் பீஸ்ட் படத்தை வசூல் வேட்டையில் கேஜிஎப் படம் முந்துமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜயின் பீஸ்ட் படத்தை வசூல் வேட்டையில் கேஜிஎப் படம் முந்துமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேஜிஎப் முதல் பாகம் வெளியாகி வசூலை வாரி குவித்தது. அதுமட்டுமல்லாமல், இந்தியா முழுவதையும் பிரமிக்க வைத்த திரைப்படமாக கேஜிஎப் விளங்கியது. இந்த நிலையில் தற்போது கேஜிஎப் சேப்டர் 2 நாளை வெளியாக உள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாரான கே.ஜி.எப் சேப்டர் 2 படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியான போது 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது. இதுமட்டுமில்லாமல் அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. இதனிடையே இன்று வெளியான விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இருந்தபோதிலும் தமிழ் மக்கள் எப்போதும் நல்ல படங்களுக்கு தங்கள் ஆதரவுகளை தருவார்கள் என்ற நம்பிக்கையில் கே.ஜி.எப் சேப்டர் 2 படம் நாளை வெளியாகிறது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த படத்திற்கான புக்கிங்கும் தொடங்கியது. தமிழகத்தில் பீஸ்ட் வருவதால் 85 சதவீதம் திரையரங்குகள் விஜய் படத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளனர். கே.ஜி.எப் சேப்டர் 2 மிச்சமுள்ள தியேட்டரில் வந்தாலும் புக்கிங் ஓபன் செய்ய செய்ய ஹவுஸ்புல் காட்சிகளாக தான் இருக்கும். விஜயை விட கேஜிஎப் படத்தின் நாயகன் யாஷ்க்கு தென் இந்தியாவுடன் வட இந்தியா ரசிகர்களின் ஆதரவும் அதிகம் உள்ளது. இதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜயின் பீஸ்ட் படத்தின் வசூலை சர்வ சாதாரணமாக கே.ஜி.எப் சேப்டர் 2 எடுக்கும் என கூறப்படுகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே அதிக வசூலை பெற்ற படமாக வார் திரைப்படம் இருந்து வருகிறது. வார் திரைப்படம் வெளியான முதல் நாளே 51 கோடி முதல் 53 கோடி வரை வசூலானதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்ததாக தக்ஸ் ஆப் இந்துஸ்தான் திரைப்படம் 50 கோடி வசூலை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து ஹாப்பி நியூ இயர் 44 கோடி, பரத் 42 கோடி, பாகுபலி 41 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வரிசையில் கேஜிஎப் சேப்டர் 2 திரைப்படம் இடம்பெறும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. வார் திரைப்படத்தில் வசூலை கூட முறியடிக்கும் என கூறப்படுகிறது. அதனை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
