wife of Karnataka politician is this famous actress only
சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் கர்நாடக தேர்தலில் பா.ஜா.க 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தான். இந்த இரண்டு கட்சியும் இணைந்தால் பெரும்பான்மை அந்தப்பக்கம் போய் விடும். இதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தான் குமாரசாமி.
கர்நாடகம் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இவர் தான் இப்போது ஹாட் டாப்பிக். இவர் முன்னாள் பிரதம மந்திரி தேவா கெளடாவின் மகனும் கூட. இவரது மனைவி யார் தெரியுமா? இயற்கை படத்தில் அப்பாவிப்பெண்ணாக நடித்திருந்த குட்டி ராதிகா தான். குட்டி ராதிகா தமிழில் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குமாரசாமியின் முதல் மனைவி அனிதா. அதன் பிறகு குட்டி ராதிகாவை 2006 ஆம் ஆண்டு இரண்டாவதாக குமாரசாமி திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இவர்களுக்கு ஷமிக்கா என்ற பெண்குழந்தையும் இருக்கிறது. இப்போது குட்டி ராதிகா கன்னடத்தில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
