Vidaamuyarchi : இன்று தல அஜித் அவர்களின் PRO வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரல். மிக மிக ரிஸ்க்கான ஒரு ஸ்டண்ட் கட்சியை டூப் இல்லாமல் செய்துள்ளார் அஜித் குமார்.

தல அஜித் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் "விடாமுயற்சி", இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளின் துவங்கப்பட்டது. அஜர்பைஜான் நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஏப்ரல் 20-ம் தேதி நடிகர் அஜித்குமார் மீண்டும் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகளை துவங்க உள்ளார். ஏறத்தாழ 60% முடிந்துள்ள நிலையில், அனிருத் அவர்களுடைய இசை அமைக்கும் பணிகளும் விரைவாக நடந்து வருகிறது என்று அஜித் அவர்களின் PRO கூறினார். 

Lollu Sabha : தீய நட்பால் சீரழிந்த வாழ்க்கை.. பரிதவிக்கும் லொள்ளு சபா ஆண்டனி - கைகொடுத்து உதவும் சந்தானம்!

இந்த சூழலில் அஜர்பைஜான் நாட்டில் அஜித் அவர்கள் ஒரு ஸ்டண்ட் காட்சியில் ஈடுபடும் பொழுது நடந்த விபத்தில் வீடியோவை பிஆர்ஓ சுரேஷ் சந்திரா அவர்கள் வெளியிட்டிருந்தார். இன்றைய தினம் இணையத்தில் மிகவும் வைரலான வீடியோவாக அது மாறியது. தற்பொழுது அந்த வீடியோவை வெளியிட என்ன காரணம் என்பது குறித்தும் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். 

தொடர்ச்சியாக இணையத்தில் விடாமுயற்சி திரைப்படம் கைவிடப்பட்டதாக போலியான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அந்த திரைப்பட பாணிகள் முழு மூச்சில் செயல்பட்டு வருகிறது என்பதை எடுத்துரைக்கவும், தல அஜித் எந்த அளவிற்கு தன்னுடைய படங்களுக்காக முயற்சிகளை மேற்கொள்கிறார் என்பதை வெளிப்படுத்தவும் தான் தற்பொழுது இந்த வீடியோ வெளியானது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

Scroll to load tweet…

படத்தின் முழுமையான பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் சுரேஷ் சந்திரா கூறினார். அதேபோல இன்னும் ஓரிரு மாதங்களில் இப்பட பணிகளை முடிக்கும் அஜித் குமார், அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழகே அள்ளுதே! கவர்ச்சி உடையில்... கடற்கரையில் ஹாய்யான காத்து வாங்கும் அருண் விஜய்யின் அக்கா மகள் தியா!