ரகுவரன் – கமல் ஹாசன் ஏன் ஒன்றாக நடிக்கவில்லை: நாயகன் ரகுவரனுக்கான படமா?
Kamal Haasan Not Acted With Raghuvaran : ரகுவரன் மற்றும் கமல் ஹாசன் ஏன் சினிமாவில் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Kamal Haasan Not Acted With Raghuvaran : தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவரான ரகுவரன் கமல் ஹாசன் உடன் மட்டும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்து ஹிட் கொடுத்த நாயகன் படத்தில் நாசர் ரோலில் முதலில் ரகுவரன் தான் நடிக்க இருந்தார். கமல் ஹாசனின் மகளின் கணவராக காவல் உதவி ஆணையர் ரோலில் நாசர் நடித்திருந்தார்.
ஆனால், இந்த ரோலுக்கு முதலில் ரகுவரன் தான் நடிக்க இருந்தாராம். இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்றிருக்கிறது. இதையடுத்து ரகுவரனும் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால், முழு கதையையும் கேட்ட பிறகு ரகுவரன் இந்தப் படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். கமல் ஹாசன் கூட இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவரிடம் பேசியிருக்கிறார். ஆனால், ரகுவரன் ஒப்புக் கொள்ளவில்லை.
SK25 படத்தில் ஏன் நடிக்க ஒத்துக் கொண்டேன் தெரியுமா? காரணத்தை சொன்ன அதர்வா!
இதையடுத்து அந்த ரோலில் நாசர் நாடித்துள்ளார். இந்தப் படத்தில் நாசர் நடிப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. அந்த காரணம் வேறு யாருமில்லை கமல் ஹாசன் தான். நாசரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் மணிரத்னத்திடம் கமல் ஹாசன் தான் கூறியிருக்கிறார். படத்தில் நடிக்கும் போது கூட நாசர் என்னை ஏன் இந்தப் படத்தில் நடிக்க வைக்க பரிந்துரை செய்தீர்கள் என்று ஆரம்ப ஷூட்டிங்கின் போது கேட்டிருக்கிறார். ஆனால், படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க தான் நாசருக்கு அந்த ரோலுக்கான முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது.
ரஜினிகாந்த், அர்ஜூன், தனுஷ், அஜித், விஜய், சத்யராஜ், விசு, பிரபு தேவா ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், கமல் ஹாசன் உடன் மட்டும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ரகுவரன் தனது ரோலுக்காக தலைமுடியை வெட்ட வேண்டிய இருந்த காரணத்தால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று அவரது மனைவியும் நடிகையுமான ரோகினி கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
விஜய் வந்தா நான் ஏன் எழுந்து நிற்கணும்; பல வருட சர்ச்சைக்கு பாலா அளித்த பளீச் பதில்
1987 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நாயகன் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் டயலாக் மற்றும் பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கமல் ஹாசனுக்கு கிடைத்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக கூட இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்காமல் இருந்திருக்கலாம். ரகுவரன் உடன் இணைந்து நடிப்பதற்கு கமல் ஹாசன் ஒருபோதும் தயங்கியது இல்லை.
பணப்பெட்டி மிஸ் ஆனா என்ன; ஜெஃப்ரிக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கமல் ஹாசன் தனது 6 வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரையில் 230 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகனாக நடித்திருந்தார். இதே போன்று அமிதாப் பச்சனுடன் இணைந்து ஜெராப்தார், கபர்தார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர ரோலிலும் ரகுவரன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமினிறி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.