உலக நாயகன் கமலஹாசனை பொறுத்தவரை, நடிப்பில் மட்டும் அல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதையும், மிகவும் வித்தியாசமாக அவருடைய பாணியில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானதுமே, மேடைக்கு வந்து, இனி பிக்பாஸ் வீட்டிற்குள் முக்கோண காதல் இருக்காது. நட்பு மட்டுமே இருக்கும் என கூறினீர்கள். ஆனால் மீண்டும் முக்கோண காதல் கதை வந்ததால், நான் மீசையை அகற்றி விட்டதாக நினைக்கலாம்.

ஆனால், அது இல்லை காரணம், ஒற்று கொண்ட கடமைகளை முடிப்பதும் கடமைதான். இதே மேடையில் ஆரம்பமான இந்தியன் பார்ட் 2  மற்றும், தலைவன் இருக்கிறன் என இரு வேலைகள் துவங்கி விட்டதால், இருபக்க மீசையையும் எடுத்து விட்டேன் என கூறியுள்ளார்.

நான் மீசையை அகற்றியதற்கு,  இங்கு பணியாற்றியவர்கள் ஒட்டு மீசை வைத்துக்கொண்டு வந்திருக்கலாமே என கூறினார்கள் என கூறி அதற்கும் ஒரு விளக்கத்தை கொடுத்தார் கமலஹாசன்.