குணா படத்திற்கு பிறகு கமலும் ஜனகராஜும் ஏன் எந்த படத்திலும் ஒன்றாக நடிக்க வில்லை என்று தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
தனது டைமிங் காமெடி மற்றும் தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் ஜனகராஜ். ரஜினி, கமல், சிவாஜி, சத்ய்ராஜ், ராம்கி, பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். அந்த வகையில் கமல்ஹாசன் – ஜனகராஜ் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
நாயகன், அபூர்வ சகோதரர்கள், விக்ரம், வெற்றி விழா, சத்யா உள்ளிட்ட பல படங்களில் கமல்ஹாசன் – ஜனகராஜ கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் பல படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாகவும் அமைந்தது. அந்த வகையில் கமல் – ஜனகராஜ் காம்போவில் கடைசியாக வெளியான படம் குணா. குணா படத்திற்கு பிறகு கமலும் ஜனகராஜும் ஏன் எந்த படத்திலும் ஒன்றாக நடிக்க வில்லை என்று தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
1991-ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் தான் குணா. எனினும் இப்படம் வெளியான போது போதிய வரவேற்பை பெறவில்லை. என்பதால் இப்படம் வணிக ரீதியில் தோல்வி அடைந்தது. ஆனால் தாமதமாக கொண்டாடப்பட்ட கமலின் படங்களில் ஒன்றாக குணா மாறியது. குணா படத்தில் ஜனகராஜ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த நிலையில் கமல்ஹாசனும் ஜனகராஜும் ஏன் பிரிந்தனர் என்பது குறித்து பிரபல தயாரிப்பாளரும் திரைப்படத் இயக்குனருமான ராசி அழகப்பன் பேசி உள்ளார். இவர் குணா உதவி இயக்குனராக இருந்தார்
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ராசி அழகப்பன் “ கமல்ஹாசன் மற்றும் ஜனகராஜ் இருவரும் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி நல்ல நண்பர்களாக இருந்தனர். ஏவிஎம் கார்டன் திரையரங்கில் குணா படத்தின் டப்பிங் பணிகளின் போதுதான் கமல் - ஜனகராஜ் இடையே விரிசல் ஏற்பட்டது.
குணா படத்திற்காக ஜனகராஜ் டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சக நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் இயக்குனர் சந்தான பாரதியும் உடன் இருந்தனர். ஜனகராஜ் சில வரிகளுக்கு டப்பிங் பேசிய பிறகு, அழகப்பன் அதை ஓகே செய்தார், ஆனால் ஆர்.எஸ்.சிவாஜி மீண்டும் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது படத்தின் இயக்குனர் சந்தான பாரதியும் மீண்டும் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஜனகராஜ் மறுத்ததால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், கைக்கலப்பாக மாறியது. ஜனகராஜை ஆர்.எஸ். சிவாஜியும், சந்தான பாரதியும் அடித்துவிட்டனர். இதனால் படத்தின் டப்பிங் பணிகள் பாதியிலே நின்றது. இந்த விஷயம் கமல்ஹாசனின் கவனத்திற்கு சென்ற போது இதுகுறித்த விசாரித்த அவர் இப்படி நடந்திருக்க கூடாது என்று கூறினார்..
மேலும் இந்த பிரச்சனையின் போது கமல்ஹாசன் சந்தான பாரதியின் பக்கம் நின்றார். ஆனால் இந்த பிரச்சனை யூனியன் வரை சென்றது. மேலும் இந்த படத்திற்கு டப்பிங் பேசமாட்டேன் என்று ஜனகராஜ் கூறிவிட, படத்தின் பணிகள் பல நாட்கள் முடங்கியதாம். ஒருவழியாக ராசி அழகப்பான் இருந்தால் மட்டுமே டப்பிங் பேசுவேன், வேறு யாரும் இருக்கக்கூடாது என்று ஜனகராஜ் கூறிவிட்டார். அதன்பின்னரே ஒருவழியாக அந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்தது. இதனால்தான் குணாவுக்குப் பிறகு கமல்ஹாசன் எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.” என்று தெரிவித்தார்.
