Asianet News Tamil

இஸ்லாத்திற்கு மாறியது ஏன்?... மனைவியை ரவுண்ட் கட்டிய நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்த யுவன்...!

இருப்பினும் இந்து மதத்தின் மீது பற்றுகொண்ட இளையராஜாவின் மகனை இப்படி மதம் மாற்றிவிட்டீர்களே என்று கூறி பலரும் ஷஃப்ரூனை கடுப்பேற்றினர். 

Why i Converted to islam Yuvan Shankar Raja Open Talk about
Author
Chennai, First Published Jun 1, 2020, 5:12 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான புகழ் பெற்றவர் இளையராஜா தனது இந்து மதத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அவருடைய இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் 2015ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆடை வடிவமைப்பாளரான ஷாஃப்ரூன் நிஷா சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். 

ரம்ஜானை முன்னிட்டு ஷாஃப்ரூன் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பலரும் நிஷாவிடம் தொடர்ந்து, யுவனை ஏன் மத மாற்றம் செய்தீர்கள்?, நீங்கள் இந்து மதத்திற்கு மாறியிருக்கலாமே?, இளையராஜாவின் மகனை மதமாற்றிவிட்டீர்களே? என ஒரே மாதிரியான கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டுள்ளனர். ரசிகர்களின் கேள்விக்கு எவ்வித பதற்றமும் இன்றி பொறுமையாக பதிலளித்துள்ளார் ஷாஃப்ரூன் நிஷா. 

இதையும் படிங்க: சாக்லெட் பாய் டூ ஆக்‌ஷன் ஹீரோ... நடிகர் மாதவனின் இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு...!

யுவன் 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமை பின்பற்ற ஆரம்பித்திருந்தார். அதன் பிறகே அவருக்கும் எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அவரது மிகப்பெரிய கேள்விகளுக்கான பதில்கள் குரானில் கிடைத்திருக்கலாம். அதனால் அவருக்கு இஸ்லாம் மதத்தை பிடித்திருக்கலாம். மதத்தை தாண்டி எங்களுடைய எண்ண அலைவரிசை ஒரே மாதிரி இருந்தது, ஆரோக்கியமான உரையாடல் மூலமாக ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம் என்று பதிலளித்திருந்தார். 

இதையும் படிங்க:  பிகினியில் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஆர்யா மனைவி.... வைரலாகும் சாயிஷாவின் ஹாட் கிளிக்...!

இருப்பினும் இந்து மதத்தின் மீது பற்றுகொண்ட இளையராஜாவின் மகனை இப்படி மதம் மாற்றிவிட்டீர்களே என்று கூறி பலரும் ஷஃப்ரூனை கடுப்பேற்றினர். இந்நிலையில் நான் ஏன் இஸ்லாமிற்கு மாறினேன் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே மனம் திறந்துள்ளார். யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் இல்லை என்பது பிடித்திருந்தது. பள்ளி வாசலில் தொழும் போது நம் இரு பக்கமும் யார் வேண்டுமானாலும் நின்று தொழலாம். இவர் தான் முன்னால் நிற்க வேண்டும், இவர் தான் பின்னால் நிற்க வேண்டும் என்ற பாகுபாடு இல்லை. இதுவே இஸ்லாத்தில் என்னை ஈர்த்த முதல் விஷயம். 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

அதேபோல் நம் ஆன்மா எங்கு செல்கிறது, இந்த ஏழை பணக்காரர் வித்தியாசம் ஏன் என என் மனதில் தோன்றும் பல கேள்விகளுக்கு குர்ஆனை ஓதிய போது எனக்கு சரியான பதில் கிடைத்தது போல் உணர்ந்தேன். வீட்டிற்கு, நாட்டிற்கு என்றில்லாமல் உலகிற்கே ஒரே தலைவன் என்பது என மனதில் பதிந்துவிட்டது. சிலர் யுவனின் கருத்துக்களை ஏற்காமல் இளையராஜாவை ஏமாற்றிவிட்டீர்களே? என்று விமர்சித்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios