why arav not kissing in barani

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட நடிகை ஸ்ரீபிரியா மற்றும், சதிஷ் ஆகியோர் மக்களின் பிரதிநிதிகளாக இருந்து, அனைவருக்கும் உள்ள சந்தேகங்களை கமலஹாசனிடம் நேரடியாக கேட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்போது ஏன் மருத்துவ முத்தம் கொடுக்கும் காட்சிகள் தங்களுக்கு ஒளிபரப்பாகவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிக் பாஸ் தரப்பில் இருந்து நேரம் இன்மை மற்றும், போட்டியாளர்களின் மரியாதை கருதி இப்படி பட்ட காட்சிகள் ஒளிபரப்ப படவில்லை என கூறினர்.

இதற்கு நடிகர் சதிஷ், ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததற்கு ஆரவ் மற்ற அனைத்து போட்டியாளர்களாலும் ஓவியா ஒதுக்கப்பட்டதால் தான் மருத்துவமுத்தம் கொடுத்ததாக தெரிவித்தார். பரணியையும் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் ஒதுக்கினார்கள் ஏன் அவருக்கு மட்டும் ஆரவ் மருத்துவ முத்தம் கொடுக்க வில்லை என கேட்டார்.

இந்த மாதிரியான ஒரு கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத கமல் என்ன சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.