தல அஜித்துக்கு சினிமாவை தவிர வேறு எதில் அலாதி விருப்பம் என்று கேட்டால் கண்டிப்பாக
அவர் சொல்வது பைக் ரேஸ் , கார்ரேஸ் , போட்டோகிராபி, சமையல் என்று தான் சொல்லுவார்.
இது அவருடைய அனைத்து ரசிகர்களும் அறிந்த செய்தியும் கூட.
ஆனால் தப்பி தவறி ஒருவர் கூட அவர் அரசியலுக்கு வருவார் என்று இதுவரை யாருமே சொன்னதில்லை. ஆனால் ஒருசில ஊடகங்கள் குறிப்பாக அண்டை மாநிலத்து ஊடகங்கள் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அஜித் தான் என்று செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த செய்தியை நல்லவேளை அதிமுக தொண்டர்கள் உள்பட யாரும் சீரியஸ் ஆக எடுத்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தை பற்றி எதையாவது எழுதினால்தான் கல்லா கட்ட முடியும் என்ற ஒரே காரணத்திற்காக அஜித் குறித்து தங்கள் கற்பனை குதிரையை கட்டவிழ்த்துவிட்டு ஒருசில ஊடகங்கள் கதை எழுதி கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை .
இந்த பொய்க்கதைகள் எல்லாம் அஜித் காதுக்கு சென்றதா என்பது தெரியவில்லை. அப்படியே சென்றாலும் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கூறிவிட்டு அவர் தன் வேலையை பார்க்க கிளம்பிவிடுவார் என்பதுதான் நிதர்சணமான உண்மை.
நமக்கு தெரிந்து அஜித் திருமணத்திற்கு ஜெயலலிதா நேரில் வந்து வாழ்த்தினார் மற்றும் முதலமைச்சர் கைகளால் ஒரு சில விருதுகள் வாங்கி இருக்கிறார் என்பதை தவிர வேறு எந்த சம்பந்தமும் இருவருக்கும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை.
ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவை கட்டிக்காக்க பல மூத்த தலைவர்கள் அதிமுகவிலேயே இருக்கின்றனர்.
அனுபவம் வாய்ந்த தலைவர் ஒருவர் நிச்சயம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை வழிநடத்தி செல்வார். எனவே அஜித்துக்கும் அதிமுகவுக்கும் போடும் கற்பனை முடிச்சை இனியாவது ஊடகங்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.
