why ajith not participate in star show sv sekar speech

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலை விழா மற்றும் கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி ஆகியவை நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினி, கமல் விஷால்,சூர்யா உள்ளிட்ட பல கோலிவுட் முன்னணி நடிகர்கர் நடிகைகள் கலந்து கொண்டனர். 

இதில் நடிகர் அஜித், விஜய், சிம்பு , தனுஷ் சந்தானம் உள்பட பல நடிகர்கள் கலந்துகொள்ளவில்லை. விஜய் குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக சீனா சென்றுள்ளதால் அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை என விளக்கமும் கொடுத்திருந்தார் மற்ற நடிகர்கள் வராததற்கு காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் அஜித் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் அஜித்தை நட்சத்திர கலை விழாவிற்காக அழைத்த போது ஏற்கனவே மக்களிடமிருந்து வசூலிக்கும் தியேட்டர் டிக்கெட்டில் தான் நாம் சம்பாதிக்கிறோம் என்றும் அதனால் நடிகர் சங்க கட்டிடத்துக்கு அவர்களிடமிருந்து வாங்காமல் நாமே போட்டு கட்டிடத்தை கட்டலாம் என்றார். அதனால் தான் அவர் இந்த நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளார் எஸ்.வி.சேகர். 

இவர், நேற்று நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள், பல நடிகர்களை விமான நிலையம் வரை வரவழைத்து அவமானப்படுத்தி அனுப்பியதாக கூறி, நடிகர் சங்கத்தில் தான் வகித்து வந்த அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.