Who said the cinema should not come to politics? Mohanraj raises the question of ...

யார் சொன்னது சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது? என்று பிரபல இயக்குனர் மோகன்ராஜா கேள்வி கேட்டுள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

அப்போது விழாவில் பேசிய மோகன் ராஜா, ‘‘சமூக அக்கறை கொண்டவர்கள் தேர்ந்தெடுப்பது இரண்டே துறைதான். ஒன்று சினிமா மற்றொன்று அரசியல்.

யார் சொன்னது சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது? என்று கேள்வி கேட்டுள்ளார்.

விஷால் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மோகன் ராஜா கூறியது விஷாலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல அமைந்துள்ளது.