தமிழ் சினிமாவை இப்போது  தங்கள் கைவசம் வைத்துக் கொண்டிருப்பது இருப்பெரும் நடிகர்கள் என்றால் அது அஜித்தும் விஜய்யும் தான். நாளுக்கு நாள் இவர்களின் ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. அதேபோல சமூக வலைத்தளங்களிலும் மோதல்கள் தாறுமாறாக வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலை ஓரம் கட்டிவிட்டு, பாக்ஸ் ஆபீஸிலும் சரி, சம்பள விஷயத்திலும் சரி முந்திச் செல்வதென்னவோ அஜித் விஜய் தான்.  பாக்ஸ் ஆபீஸில் இருவரும் புதிய சாதனையை படைப்பதும் அதனை முறியடிப்பதுமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூகுள் ட்ரெண்டில் இவர்கள் இருவரில் டாப்பில் யார் இருப்பது என்ற விவரங்கள் கிடைத்துள்ளது.

அதில் கிடைத்த புள்ளி விவரத்தின் படி அஜித்தை விட விஜய் தொடர்ந்து டாப்பில் இருந்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் குறைந்தது 50 புள்ளிகள் வித்தியாசம் இருந்து வருகிறது.

இந்த புள்ளி விவரம் கடந்த 2014-ம் ஆண்டில் ஜனவரி 1 முதல் இன்று வரையிலான புள்ளி விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. தெரியாமல் ட்விட்டரை லாக்இன் பண்ணி உள்ளே போனால், அங்கே கிடைக்கும் பதிவைப் பார்த்தால், ரஜினி சொன்னதைப் போல ஒரு நிமிஷம் தலை சுத்திடும். இவர்களின் மோதலுக்கு மேலும் தீனி போடும் விதமாக கிடைத்த இந்த சம்பவம் சமூகவலைதளைங்களில் மேலும் ட்ரெண்டிங்காய் உருவாக்கும் எனது தெரிகிறது.