பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில், அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான முகங்களில் ஒருவர் தான், நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். இவர் ஒரு கட்சியிலும் உள்ளதால் அந்த கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மத்தியிலும் இவருக்கு அதீத வரவேற்பு இருந்தது.

இவர் கலந்துகொண்ட ஒரு வாரம் சென்ற பின் தான் வெளிவந்தது காயத்ரியின் உண்மைமுகம், இவர் வாயில் இருந்து வந்த தகாத வார்த்தைகளால் பல புகார்களும் இவர் மேல் பாய்ந்தது. இவரின் நடவடிக்கையால் ஒரு நிலையில் அனைவரும் வெறுக்கும் நிலைக்கே தள்ளப்பட்டார் காயத்ரி.

இந்நிலையில் கடந்த வாரமே இவர் வெளியேற்றப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ்ஸின் புண்ணியத்தால் கடந்த வாரம் இவர் தப்பித்துக்கொண்டார். இவருக்கு பதிலாக இவரின் நெருங்கிய தோழர் சக்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் சற்று முன் தான் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறிய தகவலின் படி, அனைவரும் எதிர்பார்த்ததுபோல் இந்த வாரம், காயத்ரிதான் வெளியேற்றப்படுகிறாராம். இன்று இவர் தான் வெளியாகிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளிவந்தாலும் தற்போது உள்ளே சென்றுள்ள பிரபலங்கள் இவரின் வேலையை கையில் எடுக்காமல் இருப்பார்களா என்றால் அது சந்தேகம் தான்...