இதுவரை தான் இயக்கியுள்ள படங்களுக்காக 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ள பாலாவின் ‘வர்மா’வை அதன் தயாரிப்பாளர்கள் தூக்கி எறிந்து விட்டு அதை மீண்டும் ஒரு இயக்குநரை வைத்து எடுக்கப்போவதாக அறிவித்திருப்பது கோடம்பாக்கத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவை அதிர வைத்துள்ளது.

லேட்டஸ்டாக கிடைத்த தகவல்களின்படி ‘வர்மா’வின் தரத்தைவிட இயக்குநர் பாலா மேல் உள்ள கோபத்தில் குறிப்பாக அவரைப் பழிவாங்கும் நோக்கமே இம்முடிவுக்குக் காரணம் என்று அடித்துச் சொல்லப்படுகிறது. பாலாவின் முன் கோபம் சினிமாக்காரர்கள் அறிந்தது. விகரம் மற்றும் அவரது குடும்பத்தினருடம் படம் பார்த்த தயாரிப்பாளர் முகேஷ் படம் பார்த்து முடிந்ததும் ஓரிரு திருத்தங்கள் கூறியிருக்கிறார். அதற்கு மட்டமான வார்த்தைகளால் பதிலளித்து விட்டு உடனே இடத்தைக் காலி செய்திருக்கிறார் பாலா.இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர், வெறும் 5 கோடி செலவில் எடுக்கப்பட்ட தெலுங்கு ரீமேக்குக்கு பாலா கேட்டுக்கொண்ட ஒரே காரணத்துக்காக 15 கோடிக்கு ஒப்புகொண்டோம். ஆனால் அதற்கு மேலும் செலவிழுத்து வைத்த பாலாவுக்கே இவ்வளவு திமிர் இருந்தால் பணம் போட்ட எனக்கு எவ்வளவு இருக்கும் என்ற கொதிப்பிலேயே, பாலாவுக்கு பாடம் கற்றுக்கொடுப்பதற்காக, குறிப்பாக அவரை அசிங்கப்படுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்தாராம் தயாரிப்பாளர்.இந்தப் பஞ்சாயத்தில் துவக்கத்திலிருந்தே தயாரிப்பாளர் பக்கம் தாவிக்கொண்ட விக்ரம் அடுத்து இப்படத்தை இயக்க கவுதம் வாசுதேவ மேனனை மிகத் தீவிரமாக சிபாரிசு செய்து வருகிறாராம். இன்னும் சில இயக்குநர்கள் படத்தைத் தாங்கள் இயக்க ஆர்வமாக உள்ளதாக விக்ரமுக்கு மெஸேஜ் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணன் எப்படா காலியாவான் பழமொழி ஞாபகம் வருகிறதா?