MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • அத்துமீறி நுழைந்த பிச்சைக்காரன் – தனியாக மாட்டிக்கிட்ட அரசியை மீட்டு அட்வைஸ் செய்த குமாரவேல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!

அத்துமீறி நுழைந்த பிச்சைக்காரன் – தனியாக மாட்டிக்கிட்ட அரசியை மீட்டு அட்வைஸ் செய்த குமாரவேல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!

Unexpected Twist in Pandian Stores 2 Serial Kumaravel Saves Arasi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 716ஆவது எபிசோடில் ஆபத்தில் மாட்டிக் கொண்ட அரசியை பத்திரமாக மீட்டதோடு அவருக்கு குமார் அட்வைஸூம் செய்துள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 14 2026, 09:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்
Image Credit : jiohotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் காற்று எல்லா திசையிலும் அடிப்பது போன்று பாண்டியன் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு திசைக்கும் சென்றுள்ளனர். சரவணன் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி இருக்கிறார். செந்தில் மற்றும் மீனா இருவரும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர். கதிர் மற்றும் ராஜீ இருவரும் வீட்டில் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியாமல் இப்போது தான் ஜாலியாக வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.

26
அரசியைக் காப்பாற்றிய குமாரவேல்
Image Credit : Jio Hot Star

அரசியைக் காப்பாற்றிய குமாரவேல்

பழனிவேலும் தனியாக கடையை திறந்து தனது மனைவியோடு அண்ணன்கள் வீட்டில் செட்டிலாகிவிட்டார். ஆனால், இத்தனை ஆண்டுகாலமாக ஒருமுறை கூட பேசாமல் இருந்த பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் இப்போது பல நாட்களாக பேசிக் கொள்ளவில்லை. கோமதி எவ்வளவு டிராமா போட்டாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 716ஆவது எபிசோடில் சரவணன் மற்றும் கோமதி இருவரும் விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டனர். பாண்டியன் கடைக்கு சென்றுவிட்டார்.

36
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்
Image Credit : Jio Hot Star

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

கதிர் மற்றும் ராஜீ இருவரும் இப்போது தான் சென்னையிலிருந்து திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர். செந்தில் மற்றும் மீனா இருவரும் தனியாக சென்ற நிலையில் அரசி மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீடு திறந்திருந்த நிலையில் பிச்சைக்காரன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்து ஷோபாவில் படுத்துவிட்டான். தனது மொபைல் போனுக்கு அரசி சார்ஜ் போட ஹாலுக்கு வந்த போது ஏதோ சத்தம் வருவதை பார்த்த போது பிச்சைகாரன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

46
Pandian Stores 2 Today Episode Update
Image Credit : Jio Hot Star

Pandian Stores 2 Today Episode Update

பின்னர், பிச்சைக்காரனை துரத்த முயற்சிக்க, அவனோ அரசிக்கு அருகிலேயே வந்து கொண்டிருந்தான். இதனால் பயந்து போன அரசி கூச்சலிடவே காந்திமதி எதிர்வீட்டிலிருந்து வந்தார். அவரைத் தொடர்ந்து குமரவேலுவும் வந்தார். இதைத் தொடர்ந்து அரசி வீட்டிற்குள் இருந்து வெளியில் ஓடி வந்தார். தனது அம்மாச்சியைப் பார்த்து கட்டிப்பிடித்தார். அதன் பின்னர் வீட்டிற்குள் வந்த குமரவேல் அந்த பிச்சைக்காரனை அங்கிருந்து துரத்திவிட்டார்.

56
Pandian Stores 2 Serial Unexpected Twist Kumaravel saves Arasi
Image Credit : Jio Hot Star

Pandian Stores 2 Serial Unexpected Twist Kumaravel saves Arasi

மேலும், என்னுடைய வீட்டிற்கு வந்த போது அந்த ஆட்டம் போட்ட, இப்போது இப்படி பயந்து நடுங்குற என்று கேட்டுக் கொண்டே வீட்டில் தனியாக இருக்கும் போது கதவை பூட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும். யாரேனும் கதவை தட்டினால், ஜன்னல் வழியாக யார் என்று பார்த்து, அதன் பின்னர் தான் திறக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்தார். மேலும், ஏதாவது ஒன்று என்றால் குரல் கொடு, பக்கத்தில் தான் இருப்போம் என்றார். அதோடு அரசி மற்றும் குமரவேல் தொடர்பான காட்சிகள் முடிவுக்கு வந்தது.

66
Arasi and Kumaravel love track
Image Credit : Jio Hot Star

Arasi and Kumaravel love track

ஆனால், இப்படியொரு காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். இது அரசி மற்றும் குமரவேலுவிற்கு இடையிலான காதல் மீண்டும் மலர்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்று காதலர் தினம் என்பதால் இயக்குநரின் டுவிஸ்ட் படி மீண்டும் குமரவேல் மற்றும் அரசி இடையிலான உறவு மலரும் என்று தெரிகிறது. இனி வரும் எபிசோடுகளில் அரசி மற்றும் குமரவேல் தொடர்பான காட்சிகள் தொடரும் என்று தெரிகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீனத்தில் உச்சம் பெறும் சுக்கிரன்: இந்த 6 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்! மார்ச் 1 முதல் பணமழை தான்!
Recommended image2
மேட் ஃபார் ஈச் அதர்! இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கையே திருவிழாதான்: இதுல உங்க ஜோடி எந்த ராசின்னு பாருங்க!
Recommended image3
இந்த 3 ராசிக்காரர்களை நம்பும்போது கொஞ்சம் உஷார்; நழுவுவதில் கில்லாடிகள்; உங்கள் ராசியும் இதில் இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved