BIGG BOSS WINNER : பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்..? லீக்கான புகைப்படங்கள்.. அப்போ இவருதானா..?
பிக் பாஸ் 5வது சீசனின் வின்னர் யார் ? என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ம்தேதி தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் களைகட்டிய இந்த சீசன் ஜனவரி 16ம் தேதியுடன் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலேவுடன் நிறைவடைகிறது. 5வது சீசன் என்பதால் பஞ்சபூதங்களை கான்செப்ட்டாக கொண்டு இந்த சீசன் நடைபெற்றது. நிலம், நீர், ஆகாயம், நெருப்பு மற்றும் காற்று சக்திகளை கொண்டு போட்டியாளர்கள் இந்த சீசனை கொண்டு சென்றனர். கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் தற்போது ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் மீதமுள்ளனர்.
இவர்களுக்குள் பல முனை போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் இதன் டி.ஆர்.பி குறைந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே எங்கு பார்த்தாலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாராக இருப்பார் என்கிற பேச்சு தான் பரவலாக உள்ளது. மேலும் பல்வேறு சமூக ஊடகங்களில் இது ட்ரெண்டிங் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
நிரூப் நந்தகுமார் 5வது இடத்தில் வெளியேறி உள்ள நிலையில், நடன இயக்குநரான அமீர் 4வது இடத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என தகவல்கள் கசிந்துள்ளது.3வது இடத்தை பாவனியும் பெற்றுள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விஜய் டிவியின் ஆங்கரான பிரியங்கா இரண்டாம் இடத்தையும், ராஜு முதல் இடத்தையும் பெற்றுள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ராஜு பிக் பாஸ் ட்ரோபியை வைத்திருக்கும் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.