பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 48 மணிநேரமாக மணிக்கூண்டு என்கிற வித்தியாசமான டாஸ்க் நடைபெற்று வருகிறது. ஒரு சராசரி மனிதன் எப்படி தங்களுடைய வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிகிறானோ, அதே போல் இவர்களும் தங்களுடைய வேலைகளை குறுப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும்.

குறிப்பாக, மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு அணியை சேர்ந்தவர்களும், அலாரமாக மாறி மணியை கணிக்க வேண்டும். வெய்யில், மழை என்று பாராமல் போட்டியாளர்கள் பட்ட கஷ்டத்தை இந்த இரண்டு நாட்களும் பார்க்க முடிந்தது.

இந்த டாஸ்கை ஒரு சிலர் தவிர மற்றவர்கள், மிகவும் சீரியசாக விளையாடினார்கள். கடந்த வாரம் லக்சரி பட்ஜெட் ஜீரோ என்பதால் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டை கை பற்ற வேண்டும் என்பதற்காக பல போட்டியாளர்கள் சின்சியராக விளையாடினார்கள்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் மணிக்கூண்டு டாஸ்க் முடிவுகள் அறிவிக்கப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. சனம் அணி இரண்டு மணி நேரம் 23 நிமிடங்கள் வித்தியாசமாகவும், பாலாஜி அணியினர் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் வித்தியாசமாகவும், கேபி அணியினர் ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் வித்தியாசமாகவும், ஷிவானி அணியினர் 56 நிமிடங்கள் வித்தியாசமாகவும், அர்ச்சனா அணியினர் 18 நிமிடங்கள் வித்தியாசமாகவும், விளையாட்டை முடித்து உள்ளனர்.

எனவே ஷிவானி, ஆஜித், ரமேஷ் மற்றும் அர்ச்சனா, சம்யுக்தா, சோம் அணியினர் இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு அணிகளில் உள்ள ஆறு பேர்கள் அடுத்த வாரம் தலைவர் போட்டியில் பங்கு கொள்ள உள்ளனர் என்பதையும் பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனால் அந்த 6 போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.