- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Vijay TV : ஆரம்பிச்ச வேகத்தில் பிரபல சீரியலை இழுத்து மூடும் விஜய் டிவி... ஷாக் ஆன ரசிகர்கள்..!
Vijay TV : ஆரம்பிச்ச வேகத்தில் பிரபல சீரியலை இழுத்து மூடும் விஜய் டிவி... ஷாக் ஆன ரசிகர்கள்..!
விஜய் டிவியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் ஒன்று தொடங்கிய ஏழே மாதத்தில் முடிவுக்கு வர இருக்கிறது. அது எந்த சீரியல் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Vijay TV Serial End Soon
விஜய் டிவியில் காலை முதல் இரவு வரை சீரியல்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பல்வேறு புதுப்புது சீரியல்கள் தொடங்கப்பட்டாலும் அதில் ஒரு சில சீரியல்களை ரசிகர்களின் மனதை கவருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஏராளமான புது சீரியல்கள் தொடங்கப்பட்டன. அதில் அய்யனார் துணை சீரியலும் ஒன்று. அந்த சீரியல் தான் தற்போது நம்பர் 1 இடத்தில் உள்ளது. 300 எபிசோடுகளை கடந்து அய்யனார் துணை சீரியல் வெற்றி நடை போட்டு வருகிறது. அதேபோல் கடந்தாண்டு தொடங்கப்பட்ட மற்றொரு புது சீரியல் இன்னும் ஓர் ஆண்டு கூட நிறைவு செய்யாத நிலையில் அதற்குள் முடிவுக்கு வர உள்ளது.
முடிவுக்கு வரும் புது சீரியல் என்ன?
அந்த சீரியலின் பெயர் மகளே என் மருமகளே. விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சீரியல் தொடங்கப்பட்டது. தங்கமயில் என்கிற சீரியல் முடிவுக்கு வந்ததை எடுத்து மதியம் 3 மணி ஸ்லாட்டில் இந்த சீரியலை ஒளிபரப்பி வந்தனர். இது மகுவா ஓ மகுவா என்கிற தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலை நாராயணமூர்த்தி என்பவர் இயக்கி வந்தார். இந்த சீரியல் தொடங்கிய ஒரே மாதத்தில் இயக்குனர் மாரடைப்பால் காலமானார். அதன் பின்னர் தங்கமகள் சீரியலின் இயக்குனர் ஹரிஷ் ஆதித்யா இந்தத் தொடரை இயக்கி வந்தார். இந்தத் தொடர் 3 மணியிலிருந்து 6 மணிக்கு மாற்றப்பட்டதை அடுத்து அதற்கான டி ஆர் பி ரேட்டிங் அதள பாதாளத்துக்கு சென்றது. இதன் காரணமாக இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளனர்.
மகளே என் மருமகளே நிறுத்தப்படுவது ஏன்?
மகளே என் மருமகளே சீரியலில் கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் நாயகனாக அவினாஷ் நடித்து வந்தார். இது தவிர நீ நான் காதல் தொடரின் நாயகி வர்ஷினி சுரேஷ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக மிரட்டிய ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். 150 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருந்த மகளே என் மருமகளே சீரியல் கடந்த வாரத்தில் வெறும் 1.5 டிஆர்பி ரேட்டிங்கை மட்டும் பெற்றிருந்தது. இதனால் வேறு வழியின்றி அந்த சீரியலை இழுத்து மூட முடிவு எடுத்துள்ளது விஜய் டிவி. இந்த சீரியலின் கிளைமாக்ஸ் அடுத்த மாதம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளே என் மருமகளே சீரியலுக்கு பின்னடைவு
மகளே என் மருமகளே சீரியலின் கதை என்னவென்றால், திருமணம் ஆன சில நாட்களிலேயே மகன் இறந்துவிட அவனின் மனைவியை தன் மகளைப் போல பார்த்துக் கொள்கிறார் மாமியார். மகன் இறந்து விட்டாலும் அவனின் ஆசைகளை ஒன்று விடாமல் நிறைவேற்ற துடிக்கும் தாயின் கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்திருந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக வர்ஷினி சுரேஷ் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தாலும் இயக்குனரின் மரணம், எதிர்பாரா நேரமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மகளே என் மருமகளே சீரியல் தொடங்கிய ஏழு மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது.

