who is the sangamithra heroine

பாகுபலி படத்தை போலவே மிகவும் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம், சங்கமித்ரா இந்த படத்தை தன்னுடைய கனவு படமாக இயக்குகிறார் இயக்குனர் சுந்தர் சி. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், முதலில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் கமிட் ஆகி இருந்தார். மேலும் இந்த படத்திற்காக வெளிநாடு சென்று வால் பயிற்சி சண்டை பயிற்சிகள் மேற்கொண்டார்.

ஆனால் திடீர் என இவருக்கும் படக்குழுவினருக்கு ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த படத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார் ஸ்ருதிஹாசன். இதை தொடர்ந்து படக்குழுவினர் தற்போது தீவிரமாக மற்றொரு கதாநாயகியை தேடி வருகின்றனர். இது தொடர்பாக நயன்தாரா மற்றும் அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில்.

இது குறித்து தற்போது கூறியுள்ள தயாரிப்பாளர் தரப்பு. ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மற்றொரு நாயகி தேர்வாகி விட்டார் என்றும் விரைவில் இது குறித்து அதிகார பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.