கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு போடப்பட்டு நாளையுடன் முடிவடைய இருக்கிறது. ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சிம்பு தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இது ஒரு முழுநீள திரைப்படம் அல்ல, இயக்குநர் "கவுதம் வாசுதேவ் மேனனின்" ‘கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் ஆகும். இதில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும், கிளாஸிக் ஹிட்டான ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படக் கதாப்பாத்திரங்களான கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியாக மீண்டும் நடிக்கிறார்கள்.

த்ரிஷா குறும்படத்திற்கான தனது பகுதிகளை நிறைவு செய்துவிட்ட நிலையில், சிம்புவும் தனது வீட்டிலேயே நடைபெற்ற ஒரு சிறிய படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ஊரடங்கு நெருக்கடி காரணமாக இருவருக்கும் இடையிலான உரையாடலைப் பற்றியது என்றும் கூறப்படுகிறது.

‘கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தின் டீஸர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுதம் மேனனின் ‘Ondraga Entertainment' யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியின் காதலை மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். மற்றொரு ஹாட்டான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த குறும்படத்துக்கு ஆஸ்கார் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.