உலகநாயகன் கமலஹாசன் தொகுப்பில், கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல்நாளில், பிக்பாஸ் வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் சென்ற நிலையில், இரண்டு நாட்கள் கழித்து மீராமிதுன் 16-ஆவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

ஆரம்ப நாட்களிலேயே, வனிதாவால் பல பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் கலை காட்டியது. அவரை தொடர்ந்து, மீராமிதுன், சேரன், முகேன், அபிராமி, சாக்ஷி, தர்ஷன், கவின், லாஸ்லியா என இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு பிரச்சனையை பெரிதாக்கி அது சண்டையில் முடிந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது நிகழ்ச்சி. 

இரண்டாவது சீசன் நிகழ்ச்சியை விட மூன்றாவது சீசனுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் வித்யாசமான டாஸ்குகளை கொடுத்து வருகிறார்கள்.  

இந்நிலையில் தற்போது, பிக்பாஸ் ஒரு வழியாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதலில் கோல்டன் டிக்கெட்டை வென்று முகேன் ஃபைனலில் நுழைந்தார். அவரை தொடர்ந்து இரண்டாவதாக சாண்டி இறுதி போட்டியில் நுழைந்தார். தற்போது இறுதி கட்டத்திற்கு செல்ல நான்கு பேர் உள்ளனர். இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என்கிற கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார் என்கிற ஒரு பரபரப்பு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா தான் என கூறுகிறார்கள் ரசிகர்கள். கவினின் ரசிகர்கள் பலர் லாஸ்லியாவிற்கு தங்களுடைய, ஆதரவை கொடுத்து வருவதே இதற்கு காரணம். 

இரண்டாவது இடத்தை சாண்டி பிடிப்பார் என்றும், மூன்றாவது இடத்தை முகேன் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் தரப்பில் இருந்தும் லாஸ்லியா வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் என சற்று முன் வெளியாகியுள்ள தகவல், மற்ற போட்டியாளர்களின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.