who is the big boss winner said barani

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஏற்கனவே ஓவியா எலிமினேட் ஆக மாட்டார் என கமல் கூறிவிட்டதால் மற்ற மூன்று நபர்களில் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

இந்நிலையில் ஆர்த்தி எலிமினேட் ஆவதாக அறிவித்தார், தொகுப்பாளர் கமலஹாசன். மேலும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் கொடுமை தாங்க முடியாமல் சுவர் ஏறி குதித்து ஓட துணிந்த பரணியும் பங்குபெற்றார்.

அவரிடம் கமலஹாசன் நீங்கள் யார் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள் கேட்டதற்கு.நான் வீட்டை விட்டு கிளம்பும்போது "Bye பரணி" என சொன்னவர் தான் ஜெயிப்பார் என கூறினார். 

பரணி பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பும்போது இவருக்கு Bye பரணி என்று சொன்னவர் நடிகை ஓவியாதான். இவரை தான் வெற்றியாளர் என்று கூறினார் பரணி என்பது குறிப்பிடத்தக்கது.