காஜல் அகர்வால் மற்றும் சமந்தா இருவரும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களாக இருந்தாலும், பெரிய நடிகர்கள் படங்களில் தான் நடிக்க வேண்டும் என கொள்கையோடு உள்ளவர்கள்.

கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடிப்பதை இவர்கள் இருவருமே தவிர்த்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஏற்கனவே சமந்தா விஜயுடன் 'கத்தி' மற்றும் 'தெறி' ஆகியபடங்களில் ஜோடியாக நடித்தவர் அதே போல் காஜல் அகர்வாலும் விஜயுடன் 'ஜில்லா' மற்றும் 'துப்பாக்கி' ஆகிய படங்களில் நாயகியாக  நடித்தவர். மூன்றாவது முறையாக மெர்சல் திரைப்படத்தில், இவர்கள் இருவருமே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவதால் இவர்கள் இருவரில் யார் விஜய்க்கு மிகவும் பொருத்தமான நாயகிகள் என பிரபல நாளிதழ் கருத்துக்கணிப்பு நடத்தியது.

அதில், விஜய் மற்றும் காஜல் அகர்வாலுக்கு 55 % ஓட்டுகள் கிடைத்துள்ளது, அதே போல் விஜய் மற்றும் சமந்தாவிற்கு 45 % ஓட்டுகள் கிடைத்துள்ளது. இதிலிருந்து பலர் விஜய் மற்றும் காஜல் அகர்வால் ஜோடியை அதிகம் விரும்புகின்றனர் என தெரிகிறது.