* சமீப வருடத்தில் இயக்குநர் கம் நடிகர் சசிக்குமாரின் நெருங்கிய உறவினரும், அவரது கம்பெனியின் மேலாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த சாவுக்கு, சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் தான் காரணமென்று ஓவராய் குதித்தனர் சசி, கருபழனியப்பன், சேரன் உள்ளிட்ட இயக்குநர்கள். ஆனால் அந்த சோகத்திலிருந்து மிக மிக விரைவாக வெளியே வந்த சசி வழக்கம்போல் ஓடாத படங்களைக் கொடுக்க துவங்கினார். இந்த நிலையில் சசிக்கும், அன்புவுக்கும் இடையிலிருந்த பண பிரச்னையில் மத்தியஸ்தம் செய்து, கிட்டத்தட்ட 5 சி வரையில் குறைக்க வைத்தாராம் ஒரு நடுவர். அவர் யார் தெரியுமா? நாசரின் மனைவி கமீலாதான். (நாசருக்கு வீட்டிலேயே போட்டி இருக்கும் போலிருக்குதே)

* சிம்பு ரொம்பவே மாறிட்டார்! அவரை வெச்சு, துணிஞ்சு படமெடுக்கலாம்! அப்படின்னு மாநாடு பட க்ரூ சில்லாப்பா சர்டிஃபிகேட் கொடுத்துட்டு இருக்குது. இது கவுதம் வாசுதேவ் மேனனின் காதுகளில் விழ, அவரும் மீசையை ஷேவ் பண்ணிட்டு ஷூட்டிங்குக்கு ரெடியாகிட்டார். சீசன் 2 படம்தான் இது. ஆக்சுவலா வாரணம் ஆயிரத்தின் பார்ட் 2 வை எடுப்பாரு, சூர்யாவை மறுபடியும் கிடார்  தூக்க வைப்பாருன்னு பார்த்தால், இவரோ விண்ணைத்தாண்டி வருவாயா-2 வுக்காக சிம்புவை மறுபடியும் கேட் ஏறி குதிக்கச் சொல்றார். (கவுமோட பலமும், பலவீனமும் அந்த யதார்த்த க்ளிஷேக்கள்தான்)

* லோகேஷு கார்த்தியை வைத்து கைதி இயக்கிட்டு இருக்குறப்பவே, விஜய் படத்தில் கமிட் ஆனார். இதனால் கைதியை பற்றிய பரபரப்பு அடங்கி, விஜய் படத்தை பற்றிய பேச்சு பெரிதானது. இதனால் கார்த்தியிடம் செமத்தியாக வாங்கிக் கட்டினார் மனிதர். இதனால் இப்ப அதே மாதிரி ஒரு நிலை ஏற்பட்டு, விஜய்யிடம் வாங்கிக் கட்டிக்க கூடாது என்பதற்காக, அடுத்து தான் இயக்க, ரஜினி நடிப்பதை பற்றி மனுஷன் வாயே திறக்காம இருக்கிறார். (உங்களுக்கு பதிலாதான் ஊரே பேசுதே லோகு)

* சில ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் லைக்காவின் அதிபர் சுபாஷ்கரன். ஆனால் தமிழ்நாட்டில் சினிமா எடுக்க வந்த வகையில் பண இழப்பு, பெயரிழப்பு, அவப்பெயர் என்று பல இம்சைகளை சந்திச்சுவிட்டார். லேட்டஸ்ட்டாக ‘இந்தியன் - 2’ விவகாரத்தில் என்னமோ அந்த கிரேனை பிடிச்சு தள்ளிவிட்டதே சுபாஷ்தான் என்பது போல் ஒட்டுமொத்த பழியையும் தூக்கி தயாரிப்பு நிறுவனத்தின் மீது கமல் போட்டதில் சுபாஷ் ரொம்பவே முகம் சுருங்கிப் போய்விட்டாராம். (இந்த கவலையை மறக்க உடனடியா இன்னொரு ரஜினி படம் எடுங்க! ஆல் இஸ் வெல்)

* சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தை செம்ம கிராமத்து ஆக்ஷன், ஆரவார திருவிழா படம்! என பலர் நினைத்துக் கொண்டிருக்க, ‘இல்லையில்லை இது பாசக்கார அண்ணன் - தங்கை கதை.’ என்கிறது அப்பட யூனிட்டை சேர்ந்த குருவி ஒன்று. குஷ்பூ, மீனா, நயன், கீர்த்தி இந்த நான்கு கிளிகளில் யாரு ரஜினியின் தங்கைன்னு தெரியலையே?