எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி:

நடிகர் ஆர்யா, திருமணத்திற்கு பெண் தேடும் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் மனதில் மில்லியன் டாலர் கேள்வியாக இருப்பது ஆர்யாவை திருமணம் செய்துக் கொள்ளப்போவது யார் என்றுதான்?  இதுகுறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

16 பெண்களுடன் ஆர்யா:

35 வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் ஆர்யா, கடந்த 5 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் செய்துக்கொள்ள பெண் தேடி வருவதாகவும், விருப்பம் உள்ள பெண்கள் குறிப்பிட்ட எண்ணுக்கு அவர்களுடைய விவரங்களை புகைப்படத்தோடு அனுப்பும்படி கூறியிருந்தார். 

மொத்தம் 70,000 ஆயிரம் பெண்கள் இவருக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 16 பெண்களை திருமணம் செய்துக்கொள்ள தேர்வு செய்தார் ஆர்யா. 

இந்த 16 பெண்களுடன் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் வாரத்திற்கு இரண்டு பெண்கள் வெளியேற்றப்பட்டனர். 

இறுதி போட்டியாளர்கள்:

தற்போது இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக மூன்று பெண்கள் உள்ளார். அவர்கள், கேரளாவை சேர்ந்த அகாத்தா, சீதா லட்சுமி மற்றும் இலங்கை பெண் சுசானா ஆகியோர். 

இவர்களில் யார்:

இறுதிக்கட்ட போட்டியாளர்களான இவர்களை தன்னுடைய குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஆர்யா, இந்த மூன்று பெண்களுடனும் மெஹந்தி நிகழ்ச்சியையும் கொண்டாடினார். இருப்பினும் ஆர்யா திருமணம் செய்துக்கொள்ளும் அந்த ஒருவர் யார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றார். 

வெளியான தகவல்:

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது, அதில் இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட ஸ்வேதா மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரம் சீதா லட்சுமியை கட்டி பிடித்து கல்யாணப் பொண்ணு என்று கட்டி அணைத்து முதம்மிட்டனர். 

இந்த வீடியோ மூலம் இறுதியாக இவர் தான் ஆரியாவை திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண் என்று கூறப்படுகிறது. என்னினும் கடைசி நேரத்தில் கூட எது வேண்டும் ஆனாலும் நடக்கலாம் அது என்ன என்பதை பொறுத்திருந்து பாப்போம்....