- Home
- Cinema
- உணவூட்டும் விவசாயத்திற்கு உயிர்யூட்டும் நந்தகுமார்; மண்ணைக் காக்க வந்த மாமனிதனின் சாதனைகள்!
உணவூட்டும் விவசாயத்திற்கு உயிர்யூட்டும் நந்தகுமார்; மண்ணைக் காக்க வந்த மாமனிதனின் சாதனைகள்!
Inspirational Story of Natural Farmer Nandhakumar : நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்கவும், அழிந்து வரும் பூர்வீக விதைகளை மீட்டெடுக்கவும் போராடி வரும் தமிழ் விவசாயி நந்தகுமாரின் ஊக்கமளிக்கும் பயணம் குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.

விவசாயி நந்தகுமார்
நந்தகுமார் ஒரு தமிழ் நாட்டைச் சேர்ந்த விவசாயி இவர் வீழ்ந்து கிடக்கும் விவசாயத்தை உயர்த்தி நிறுத்துகிறார். இவரைப் பற்றி பார்க்கலாம். இந்த அதிவேக காலகட்டத்தில் வசதியான வாழ்க்கைகாக எத்தனையோ மனிதர்கள் தேடி அலைகின்றனர். ஆனால் விவசாயி நந்தகுமார் இந்த வசதியான வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. இயற்கையான விவசாயத்துடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார். விவசாயத்தை மீட்டெடுக்கும் வகையில் இயற்கையோடு ஒன்றி ஒரு சாதாரணமான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
யார் இந்த நந்தகுமார்?
திருப்பத்தூரில் பிறந்து ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து வருகிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் முடித்தவர். இந்த MBA பட்டதாரி வேலைக்காக பல இடங்களுக்கு வேலை தேடி அலைந்திருக்கிறார். ஆனால் இவருக்கு கார்ப்பிரைட் கம்பெனிகளில் வேலை செய்ய பிடிக்காமல் சுயமாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அதோடு விவசாயத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் தான் என்னவோ இப்போது இயற்கைச் சூழலில் மேகக் கூட்டங்களுக்கு நடுவில் தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து வருவதோடு விவசாயத்தை பாதுகாத்து வருகிறார். திருமணம் செய்து கொண்டதோடு மனைவியுடன் காட்டுக்குள் தான் வாழ்கிறார். அவரது மனைவியின் பெயர் கமலி. அவரும் ஒரு படித்த பட்டதாரி.
நந்தகுமாரனின் வீடு:
நந்தகுமார் ஒரு சாதாரண மண் வீடு கட்டி அந்த வீட்டில் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்து வருகின்றனர். அவருக்கு ஏற்ற வகையில் அனைத்து பயிர்களையும் வளர்த்து அவருக்கு தேவையான உணவுகளை அவர்களே உருவாக்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். அவரது வீடு மாடமாளிகை அல்லாமல் சாதாரண எளிமையான ஒரு மண் வீடு தான். அதுவே நம் நாட்டின் பாரம்பரியம் என்று அவர் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதனால் எனக்கு மண் வீடு போதும் என்றெல்லாம் கூறியுள்ளார். இது தற்போது வசதி வாழ்க்கையை தேடி வரும் மனிதர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அண்ணா பல்கலைக்கழக பட்டதாரி நந்தகுமார் இருந்து வருகிறார் என்று பலரும் பாராட்டுகின்றனர்.
Native Foods India:
இயற்கையான உணவை நுகர்வோருக்கு நேரடியாக வழங்கும் நோக்கில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார் நந்தகுமார்.
Adya Naturals:
சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களின் விளைபொருட்களைச் சந்தைப்படுத்த உதவும் ஒரு விவசாயக் கூட்டுறவாக நந்தகுமார் செயல்படுகிறார். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமல், இயற்கை முறைகளைப் பயன்படுத்தி விளைபொருட்களை உற்பத்தி செய்கிறார். விவசாயத்தை ஊக்குவித்து விவசாயிகளையும் ஊக்குவித்து வருகிறார்.
தடம் பதித்தவர்:
நந்தகுமார் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சமையல் போட்டியான மாஸ்டர் செஃப் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்து முதல் பதிப்பை தொலைக்காட்சியில் மூலம் தடம் பதிக்கிறார். இரண்டாவது ஆக விஜய் டிவியில் காமெடி கலந்த ஒரு சமையல் போட்டி தான் குக்கு வித் கோமாளி சீசன் 6ல் கலந்துகொண்டு விவசாயத்தின் முன்னுரிமையையும் அவசியத்தையும் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.
ஆரோக்கியமான உணவுகள்:
ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்து அதை சந்தேகப்படுத்துதலில் கண்காணித்து விவசாயிகளை ஊக்குவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவரது விவசாயம் தொடர வேண்டும் பல படித்த பட்டதாரி விவசாயிகள் உருவாக வேண்டும் என்று உணர்வை முன்மாதிரியாக வைத்து நடக்க வேண்டும் என்பதுதான் இவரது எண்ணம். சேற்றில் இறங்கினால் தான் சோறு தற்போது அந்த நிலைமையில் தான் நாம் உள்ளோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தலைமுறை தலைமுறையாக இந்த விவசாயத்தை இவரது குடும்பம் செய்தி வருகிறது. உணவு ஊட்டும் விவசாயத்திற்கு நாம் உயிர் கொடுப்போம்…
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.