தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் ஒரு பேரே வரலாறு லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் மட்டுமின்றி இப்போது தொண்டர்களும் சேர்ந்து காத்திருக்கும் படம் தான் ஜன நாயகன். வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9ஆம் தேதி திரைக்கு வரும் ஜன நாயகன் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி சோஷியல் மீடியாவையே திணற வைத்து வருகிறது. ஏற்கனவே காலையில் ஈரோட்டில் தளபதி விஜய் மக்கள் மத்தியில் பேசி தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
2026 ஆம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஜன நாயகன். விஜய்யின் கடைசி படமான இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க அரசியல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தெலுங்கு படமான பகவந்த கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இந்தப்படம் தான் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜு, மோனிசா பிளெஸ்ஸி, பிரியாமணி, பிரகாஸ்ராஜ், கெளதம் மேனன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கேவி என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 27ம் தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடக்கும் நிலையில் 2வது சிங்கிள் டிராக் குறித்த அப்பேட் நேற்று வெளியான நிலையில் சற்று முன் ஒரு ஊரே வரலாறு என்று தொடங்கும் ஜன நாயகன் படத்தின் 2வது சிங்கிள் டிராக் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளஹ்டு. ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாதே: அவன் தான் ஜன நாயகன், நம் மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது தல வந்தால் தரமானவன் என்று வீடியோவில் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது.

