சமீபத்தில், ரகுல் ப்ரீத் சிங்கின் சொந்த வாழ்க்கை பற்றி செய்து ஒன்று வெளியானது. அதில், பிரபல தெலுங்கு நடிகரும், பாகுபலியின் வில்லனுமான ராணாவை, ரகுல் காதலிப்பதாக பேசப்பட்டது. 


தற்போது, அவர் அளித்துள்ள பேட்டியில், அதை மறுத்துள்ளார். "எங்கள் இருவரது வீடும் மிக அருகில் தான் உள்ளது. இரண்டு நிமிடத்தில் சென்றுவிடலாம். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராணாவை தெரியும். அப்போது அவர் காதலில் இருந்தார். 

நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். நான் சிங்கிள் தான். இதுவரை யாரையும் காதலித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை" என கூறியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.ராணாவுடன் நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கள் வருவது இது புதிதல்ல. 

ஏற்கெனவே, திரிஷா, பிபாசா பாசு உள்ளிட்ட நடிகைகளுடன் ராணாவை தொடர்புப்படுத்தி செய்திகள் வந்தன. ஆனால், அவையெல்லாம் கிசுகிசுக்காளகவே பார்க்கப்பட்டது. இதேபோல், ரகுல் - ராணா செய்தியும் ஒரு கிசுகிசுதான் என தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.