டூடுல் வெளியிட்டு ஹீரோயினை கவுரவித்த கூகுள்... யார் இந்த பி.கே.ரோஸி?

பிகே ரோஸியின் 120-வது பிறந்தநாளான இன்று, அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

Who is PK Rosy why google celebrates her with special Doodle

உலகின் முன்னணி தேடுதளமாக விளங்கி வருகிறது கூகுள். அந்நிறுவனம் சினிமா, அரசியல், அறிவியல் என பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கவுரவிக்கும் வகையில் டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பி.கே.ரோஸி என்பவரின் பிறந்தநாளான இன்று, அவரை கவுரவிக்கும் விதமாக டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. யார் அந்த பி.கே.ரோஸி என்பதை தற்போது பார்க்கலாம்.

பி.கே.ரோஸி என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவர். பட்டியலின பெண்ணான இவர் மலையாள படத்தில் நடித்த முதல் நடிகை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். மலையாளத்தில் கடந்த 1930-ம் ஆண்டு வெளிவந்த முதல் படமான விகதகுமாரன் என்கிற படம் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார் பி.கே.ரோஸி.

இதையும் படியுங்கள்... கே.ஜி.எஃப் 2 படத்தின் லைஃப்டைம் கலெக்‌ஷனை அசால்டாக அடிச்சுதூக்கி வசூலில் நம்பர் 1 இடம்பிடித்த பதான்

பெண்கள் பல்வேறு விதமான ஒடுக்குமுறைக்கு ஆளான காலகட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் துணிச்சலாக முன் வந்து படத்தில் நடித்தது பெரும் சாதனையாகவே கருதப்பட்டது. அதுமட்டுமின்றி இவர் இப்படத்தை காண வரக்கூடாது என அந்த சமயத்தில் அதிகாரவர்கத்தை சேர்ந்த செல்வந்தர்கள் அவரை தடுத்ததோடு, திரையரங்கின் மீது தாக்குதலும் நடத்தி உள்ளனர்.

இவ்வாறு கேரளாவில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த பி.கே.ரோஸி, கேசவப்பிள்ளை என்பவரை திருமணம் செய்துகொண்டு தமிழகத்துக்கு வந்து, தன்னுடைய அடையாளங்களை மறைத்துக்கொண்டு ராஜம்மா என்கிற பெயருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது வாழ்க்கையைத் தழுவி பிகே ரோஸி என்கிற பெயரிலேயே மலையாளத்தில் திரைப்படமும் எடுக்கப்பட்டு கடந்தாண்டு ரிலீஸ் ஆனது. இன்று நடிகை பிகே ரோஸியின் 120-வது பிறந்தநாள் என்பதால், அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா? தீயாய் பரவும் தகவல்... பின்னணி என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios